துறையூரில் ஆம்புலன்ஸை விரட்டியடித்த அதிமுகவினர்.. “மனிதநேயமற்ற செயல்” - செல்வப்பெருந்தகை கண்டனம்
திருச்சி: திருச்சி துறையூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்க ஆம்புலன்ஸ் ஒன்று, அதிமுக கூட்டம் நடந்த பகுதியின் வழியாக செல்ல முயன்றது. ஆனால் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தி அதிமுகவினர், அதை வந்த வழியாகவே விரட்டினர். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
திருச்சி மாவட்டம் துறையூரில் அதிமுகவினர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்த நிலையில், அதை மறித்த அதிமுகவினர் ஓட்டுநரை தாக்க முயன்றுள்ளனர். ஆம்புலன்ஸில் பின்புறம் சோதனையிட்ட அவர்கள், சில பொருட்களை சேதப்படுத்தவும் முயன்றுள்ளதாக சொல்லப்படுகிறது. பின்னர் வந்த வழியாகவே ஆம்புலன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, "இன்று திருச்சி துறையூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கியவர்களை உயிர் காப்பாற்றும் நோக்கில் விரைந்து சென்ற ஆம்புலன்ஸை அஇஅதிமுகவினர் வழிமறித்து தடுத்து நிறுத்திய சம்பவம் மிகக் கடுமையான, மனித நேயமற்ற செயல் ஆகும்.
அவசர சிகிச்சை பெற வேண்டிய உயிர்களை அரசியல் சண்டை, அல்லது குறுகிய மனப்பான்மையால் தடுக்க முயன்றது மனித நாகரிகத்திற்கே கேள்விக்குறியாகும். மனித உயிரை விட அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்த அராஜகச் செயலுக்கு எனது வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன். மனித உயிர் ஆபத்தில் இருக்கும் நேரங்களில் ஆம்புலன்ஸின் சுதந்திர உரிமையைத் தடுக்க நினைப்பது சட்ட ரீதியாகவும் குற்றமாகும்.
எடப்பாடி பிராச்சாரத்தில்
— திராவிடன் மீரான் திமுக (@DmkMeeranbabu) August 24, 2025
சற்று முன் திருச்சி துறையூர் பைபாஸ் சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிருக்கு போராடியவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் அதிமுகவினர் வழிமறித்து அராஜகம் செய்ததால்...
விபத்தில் பாதிக்கபட்டவர்கள் மருத்துவமனை செல்ல முடியாத அவலம்.@Udhaystalin@mkstalin pic.twitter.com/Jj3xOdtrin
அஇஅதிமுகவினர் செய்த இந்த மிரட்டல் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக வேலூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டிருந்த போது 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதிமுக கூட்டத்தில் நெரிசலை ஏற்படுத்த ஆம்புலன்ஸை திமுக திட்டமிட்டே அனுப்புவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். மட்டுமல்லாது அடுத்த முறை ஆம்புலன்ஸில் நோயாளி இல்லாமல் வந்தால், அதில் ஓட்டுநர் நோயாளியாக படுக்க வைக்கப்பட்டு அனுப்பப்படுவார் என்று மிரட்டும் தொணியில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications