இன்று திருச்சிக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. அங்கிருந்து திருவாரூர்! ஷெட்யூல் என்ன? முழு விவரம்
திருச்சி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் இன்று இரவு திருச்சி வருகிறார். அதன் பின்னர் சாலை மார்க்கமாக திருவாரூர் செல்கிறார். முதல்வர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று இரவு விமானம் மூலம் திருச்சிக்கு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், சாலை மார்க்கமாக திருவாரூருக்குச் செல்கிறார். அங்கே ஓய்வுக்குப் பிறகு நாளை மறுநாள் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பிறகு, அன்று இரவு மன்னார்குடியில் இருந்து மன்னை விரைவு ரயில் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார்.

திருவாரூர் மாவட்டம், காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் தலைமையேற்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். அதேபோல, முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
திருவாரூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டம் மிகப் பிரமாண்டமாக திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டத்தில் இரண்டு திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கருணாநிதியின் முழு உருவ சிலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இந்த திறப்பு விழாவிற்கு முன்னதாக வைரமுத்து தலைமையில் கவியரங்கமும், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் நடைபெற உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு திருச்சி வருவதை முன்னிட்டு அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பை கொடுக்க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.
திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக முதல்வர் திருவாரூர் செல்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய மண்டல ஐ.ஜி, மாநகர காவல் ஆணையர் ஆகியோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சி மாவட்டத்தில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்களை பறக்கவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications