திருச்சியில் பிபின் ராவத் போட்டோவிற்கு ஆளுநர் ரவி அஞ்சலி! சீனாவை பின்வாங்க வைத்தவர் என புகழாரம்
திருச்சி: குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் படத்துக்கு திருச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.
குன்னூர் அருகே நேற்று ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலையே நீலகிரி சென்றார். இன்று வெலிங்டன் ராணுவ மையத்தில் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா-புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். ராணுவ அதிகாரிகளும் பிபின் ராவத் உள்ளிட்டோர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

பாரதிதாசன் பல்கலை. பட்டமளிப்பு விழா
இதனிடையே இன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்தில் பிபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி
அப்போது, பிபின் ராவத் படத்துக்கு மலர் வளையம் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பொன்முடி. அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதியாக பணியாற்றிய காலத்தில் திடமான முடிவுகளை எடுத்தவர் பிபின் ராவத். அவருடன் பிரதமர் அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிந்துள்ளேன்.

மிரண்ட சீனா
2017-ல் திபெத் எல்லையில் சீனா ஊடுருவ முயன்றபோது அந்த ராணுவத்தை பின்வாங்க வைக்கும் வகையில் காத்திரமான முடிவுகளை எடுத்தவர் பிபின் ராவத். நமது தேசம் மிகச் சிறந்த ராணுவ வீரரை இழந்துவிட்டது. பிபின் ராவத்தின் பணி மகத்தானது. அவரது மறைவு மிகப் பெரும் இழப்பாகும். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
Recommended Video

ஶ்ரீரங்கம் கோவிலில்..
முன்னதாக இன்று காலை ஶ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வேதமந்திரங்கள் முழங்க அறநிலையத்துறை சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ராமானுஜர் சன்னதி, நம்பெருமாள் மூலஸ்தானம், தாயர் சன்னதி ஆகிய இடங்களில் சாமி தரிசனம் செய்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications