ஶ்ரீரங்கம் தொகுதியில் பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி நிவாரணமாக வழங்கினார் அமைச்சர் வளர்மதி
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் மற்றும் பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மக்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பாக1000 குடும்பங்களுக்கு இன்று 5 கிலோ அரிசியினை அமைச்சர் எஸ். வளர்மதி வழங்கினார்
கொரோனா வைரஸ் தொற்று தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், படிப்படியாக ஊரடங்கு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கே கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பிலும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தாங்களாக முன்வந்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஶ்ரீரங்கம் தொகுதியில் தனது சொந்த நிதியில் இருந்து தொகுதியில் பனையபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இன்று காலை 1000 குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக 'ஜந்து கிலோ அரிசியை தொகுப்பினை தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி வழங்கினார்

அதேபோல் மணிகண்டம் ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சியில் கல்லாயி அம்மன் தெரு, முருகன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 400 குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக 'அரிசியை தொகுப்பினை நேற்று அமைச்சர் எஸ்.வளர்மதி பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர், சத்திரப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் நவலூர் குட்டப்பட்டு செல்வம், கூட்டுறவு சங்க தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications