ஸ்ரீரங்கம் கோயில் ஆண்டாள் யானைக்கு 44 ஆவது பிறந்தநாள்.. கூடையில் சாக்லேட்டுடன் வந்த பர்த்டே பேபி
பிறந்தநாளையொட்டி ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் சாக்லேட் கொடுத்து மகிழ்ந்தது.
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் தனது பிறந்தநாளையொட்டி சாக்லேட் கொடுத்து மகிழ்ந்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டாள், லட்சுமி ஆகிய 2 யானைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் யானை ஆண்டாளுக்கு நேற்று 44-வது பிறந்தநாள் ஆகும். இதனால் காலையில் குளித்து புத்தாடை அணிந்து, கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பக்தர்களுக்கு கூடையில் சாக்லேட்டை தூக்கிக் கொண்டு வந்து கொடுத்தது.
இதைப்பார்த்து பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். சிறுவர்கள் உற்சாகத்துடன் கூடையில் இருந்து சாக்லேட்டை எடுத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து இணை ஆணையரும், பக்தர்களும் யானைக்கு பழங்களை வழங்கினர்.

பொள்ளாச்சி
கடந்த 28.02.1979-ம் ஆண்டு பொள்ளாச்சி வனப்பகுதியில் பிறந்த ஆண்டாளை திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் வாங்கி வளர்த்து வந்தார். அவர் பின்பு ஆண்டாளை காரமடை அரங்கநாத சுவாமி கோவிலுக்கு தானமாக வழங்கினார். காரமடை கோவிலில் இருக்கும் போது ரஜினிகாந்த நடித்த தம்பிக்கு எந்த ஊர் என்ற படத்தில் ரஜினிக்கு ஆசீர்வாதம் செய்யும் காட்சியில் வரும்.

ஸ்ரீரங்கம் கோயில்
பின்பு ஆண்டாளை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வேண்டும் என்று முறைப்படி எழுதி வாங்கி, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தொழில்அதிபர் ஒருவர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தானமாக வழங்கினார். ஆண்டாள் ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு 17.10.1986 அன்று தன் முதல் சேவையை ஆரம்பித்தது. பெருமாளுக்கான தன் முதல் சேவையிலேயே தங்க குடத்தில் புனித நீர் எடுக்கும் பாக்கியத்தை பெற்றது இந்த ஆண்டாள் என்பது குறிப்பிடத்தக்கது.

108 திவ்யதேசங்கள்
ஸ்ரீரங்கம் கோயில் பூலோக வைகுண்டம் என்றும் 108 திவ்யதேசங்களில் முதன்மையானது என்றும் போற்றப்படுகிறது. இங்கு வளர்க்கப்படும் இந்த ஆண்டாள் யானை புத்திசாலியாகும். இந்த கோயிலுக்கு இந்த யானை கொண்டு வரப்பட்ட போது அதற்கு 8 வயது. தற்போது இந்த கோயிலுக்கு வந்து 36 வருடங்கள் ஆகிறது.

8 ஆண்டுகள்
கடந்த 8 ஆண்டுகளாக ஆண்டாளை பராமரித்து வரும் பாகன் ராஜேஷ் மலையாளத்திலும் தமிழிலும் கேட்கும் கேள்விகளுக்கு ஆண்டாள் யானை சப்தம் எழுப்பியும் தலையை அசைத்தும் குழந்தையை போல பதில் சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடைபெறும் நாட்களில் அதிகாலை 3 மணிக்கெல்லாம் ஆண்டாள், பெருமாள் சன்னதி முன்பு ஆஜராகிவிடும். முதல் தரிசனத்தை பெருமாள், ஆண்டாளுக்குதான் தருவார். அது போல் முதல் பிரசாதமும் ஆண்டாளுக்குத்தான்.

மவுத்ஆர்கன்
இந்த யானை தும்பிக்கையால் மவுத்ஆர்கனை அழகாக வாசிக்கும். ஆண்டாள் சமத்து தானே என பாகன் கேட்டால் அதற்கு உம் என சப்தம் எழுப்புவாள். எங்கே போகணும் என்றால் தும்பிக்கை மூலம் பதில் அளிப்பாள். சாப்பிட்டாயா என கேட்டால் போதும் அதற்கு சப்தம்தான். இந்த யானை ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் செல்லப்பிள்ளையாகவே வலம் வருகிறாள். கோயில் வழக்கங்கள் எல்லாமே ஆண்டாளுக்கு நன்றாக தெரியும். பாகனின் கட்டளை இல்லாமலேயே அனைத்தையும் சரியாக செய்வாள். ஆண்டாளுக்கு கோயில் உள்ளே தனியாக பிரம்மாண்ட கொட்டகை கட்டப்பட்டுள்ளது. இதனால் ஆண்டாளுக்கு குஷியாம். ஒரு இடம் பிடிக்காவிட்டால் கிளம்பலாம் என பாகனுக்கு சிக்னல் கொடுப்பாளாம் இந்த ஆண்டாளு!
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications