சல்லுனு 45 நிமிடங்களில் இனி திருச்சி போகலாம்! மதுரையில் இருந்து புதிய விமான சேவையை துவக்கிய இண்டிகோ

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து மதுரை மற்றும் திருச்சி ஆகிய முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே பெரிய ரக விமானங்களின் வருகையால் விமானங்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் சிறிய ரக விமானங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சிக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மாற்றத்தினால் பயணிகள் அடையும் நன்மைகள் மற்றும் கால அட்டவணை குறித்த விரிவான விவரங்கள் வெளியாகியுள்ளன.

Trichy Air Travel Indigo Madurai

சென்னை டூ மதுரை

கடந்த 2025 டிசம்பர் 15-ம் தேதி வரை, சென்னை மற்றும் மதுரை இடையே 82 பேர் பயணிக்கக்கூடிய சிறிய ரக ஏ.டி.ஆர் விமானங்கள் தினசரி 16 முறை இயக்கப்பட்டன. ஆனால், டிசம்பர் 16 முதல் இண்டிகோ நிறுவனம் 184 இருக்கைகள் கொண்ட பெரிய ரக ஏர்பஸ் விமானங்களை அறிமுகப்படுத்தியபோது, விமானங்களின் எண்ணிக்கை தினசரி 6 ஆக குறைக்கப்பட்டது.

இருக்கை வசதி அதிகரித்தாலும், விமானங்களின் எண்ணிக்கை குறைந்ததால் பண்டிகை காலங்களில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். குறிப்பாக, கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் போன்ற விடுமுறை நாட்களில் டிக்கெட் கிடைக்காமல் தவித்து போனார்கள்.. அதே சமயம், சாதாரண நாட்களில் பெரிய ஃபிளைட்களில் போதிய பயணிகள் இல்லாத சூழலும் நிலவியது.


திருச்சி விமான நிலையம்

இந்த சிக்கல்களை தீர்ப்பதற்காகவே, இப்போது மீண்டும் சென்னை - மதுரை இடையே தினசரி 16 விமான சேவைகள் (இருமார்க்கத்திலும் தலா 8) தொடங்கப்பட்டுள்ளன.

இதன்படி காலை 6:10 மணி முதல் இரவு 8:05 மணி வரை பல்வேறு நேரங்களில் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனுடன் ஏர் இந்தியா நிறுவனத்தின் 2 விமானங்களையும் சேர்த்தால், மதுரைக்கு தினசரி 18 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் பயணிகளுக்கு கூடுதல் நேர தேர்வுகள் கிடைப்பதோடு, அவசரத் தேவைகளுக்காகப் பயணம் செய்வோருக்கு எந்த நேரமும் விமான வசதி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், திருச்சி வழித்தடத்திலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பு 12 ஆக இருந்த விமான எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டதால் பயணிகள் சிரமப்பட்டனர். இதனை சரிசெய்யும் விதமாக, தற்போது மதியம் 1:35 மணிக்கு ஒரு கூடுதல் விமானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சிக்குச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

ஏர்பஸ்கள் - ஃபிளைட் வசதி - பயணிகள் குஷி

இப்படி காலை மற்றும் மாலை நேரங்களில் பெரிய ஏர்பஸ் விமானங்களும், மதிய நேரங்களில் சிறிய ரக விமானங்களும் இயக்கப்படுவதால், அனைத்த தரப்பு பயணிகளுக்கும் தடையற்ற போக்குவரத்து சேவை கிடைக்கிறது. இந்த மாற்றங்களின் முக்கய பலனாக, தென் மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள், நோயாளிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் குறித்த நேரத்தில் தங்களது பயணத்தைத் திட்டமிட முடிகிறது.

அதுமட்டுமல்ல, அடிக்கடி விமானங்கள் இருப்பதால் கடைசி நேரக் கட்டண உயர்வு ஓரளவு கட்டுப்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக, விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு தென் தமிழகத்தின் பொருளாதார மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்துசக்தியாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+