வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் மீது வழக்குப் பதிவு
திருச்சி: திருச்சியில் வன்முறையை தூண்டும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும் மதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல் துறையினர் பதிவு செய்த வழக்கில் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 23 ஆம் தேதி காலை ஆஜரானார்.

இந்த வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் கலகம் செய்யும் நோக்கத்தோடு கூடியது, ஆயுதங்களை வைத்திருந்தது, பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது உள்ளிட்ட வழக்குகளை நாம் தமிழர் கட்சியினர் மீதும் மதிமுகவினர் மீதும் காவல் துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சீமானும் மதிமுகவினரும் நேற்று முன் தினம் ஆஜராகினர். இந்த வழக்கை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பாபு , வழக்கை வரும் ஏப்ரல் 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறையில் இருந்த சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் விடுதலை என்ற பெயரில் சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர்களுக்கு எப்படி விடுதலை கிடைக்கும். அவர்களை உடனடியாக அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 23 ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் போலீஸார் அனுமதி அளிக்கவில்லை.
தமிழகத்தில் கருத்து சுதந்திரம் குறித்து பேசினாலும் அது நடைமுறையில் இல்லை என கூறினார். இந்த நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிலையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் உள்பட 500 பேர் மீது திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications