வெளிநாட்டிலிருந்து தாயகம் வருவோர் அரசு முகாம்களில் தங்கி ஓய்வெடுக்கலாம்.. திருச்சி ஆட்சியர்
திருச்சி: வெளிநாட்டிலிருந்து தாயகம் வருவோருக்கு, இலவசமாக, தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கியிருக்க அரசு முகாம்களில் தயக்கமின்றி தங்கி ஓய்வெடுத்து செல்லலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது : வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அவரவர் சொந்த ஊருக்கு செல்வதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், குறிப்பாக தமிழகம் வந்த பின்னர், விமான நிலையங்களிலிருந்து சொந்த ஊர் செல்வது, மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு செல்வதில் கூடுதல் கட்டணங்களை, மாவட்ட நிர்வாகங்கள் கறாராக வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக, கடந்த இரு நாள்களுக்கு முன்பு, பல்வேறு நாடுகளிலிருந்தும் திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கும், பேருந்து ஊழியர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்த காணொலி சமூக வலைதளங்களில் பரவியதுடன், நாளிதழ்களிலும் செய்திகள் பிரசுரமாயின. இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை, மாலத்தீவிலிருந்து வந்த பயணிகளில் சிலரும் இதேபோல, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து, அரசுப் போக்குவரத்துக் கழகத்தினர் கூறுகையில், விமான நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு அரசு பேருந்துகளில் செல்வோர், பேருந்துகளை இயக்குவதற்கு ஆகும் செலவை, அந்த பேருந்தில் செல்வோர் பங்கிட்டுக் கொள்வதன் மூலம் ஒரு நபருக்கான தொகை கணக்கிடப்படுகின்றது. விருப்பமுள்ளோர் பேருந்துகளில் செல்லலாம் அல்லது தனியாக வாகனம் அமைத்தும் செல்லலாம். யாரையும் கட்டாயப்படுத்தி கட்டணங்கள் வசூலிக்கவில்லை என்றனர்.
தனிமைப் படுத்தும் முகாம்களில் தங்குவது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகையில், பயணிகள் தாயகம் வருவதற்கு முன்பதிவு செய்து, உரிய அனுமதி கோரும் போதே, விதிமுறைகள் குறித்து தெளிவாக தெரிவித்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் அவை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
முகாமில் தங்குவதற்கான விதிமுறைகள்: வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் உடலின் வெப்பநிலை சோதிக்கப்படும். தொடர்ந்து சோதனைக்கான மாதிரிகளும் சேகரிக்கப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications