மகாராணி போயிட்டியே.. லவ்வரும் நண்பர்களும் கூட்டாக கொன்னுட்டாங்களே! திருச்சி கல்லூரி மாணவி திக் மரணம்
திருச்சி: திருச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ராஜகோபால் சாலையில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வருகிறார் கோவிந்தராஜன். அவரின் 19 வயதாகும் மகள் ஜெய ஸ்ரீதான் மர்ம மரணத்திற்கு உள்ளானார். கருமண்டபம் நேஷனல் கல்லூரியில் இவர் படித்து வந்தார்.

சித்திரவீதி பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணன் என்பவரின் மகன் கிஷோர் பள்ளி நாளில் இருந்து ஜெய ஸ்ரீ உடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இரண்டு பேருமே பள்ளி வயதில் இருந்தே தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இரண்டு பேரும் காதலித்தது இரண்டு வீட்டாருக்கும் தெரியும்.
இருவரும் தினமும் கிஷோரின் நண்பர் ஸ்ரீராம் வீட்டில் சந்திக்கும் வழக்கத்தை கொண்டு உள்ளனர். இரண்டு பேரும் ஸ்ரீராம் வீட்டின் மாடிக்கு செல்வது வழக்கம். அங்கே ஸ்ரீராம் நண்பர்கள் தீபக், ராகுல் , ரிஷி ஆகியோர் இருப்பர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக பேசுவது, அரட்டை அடிப்பது தினமும் வழக்கம்.
ஸ்ரீராமின் தாயார் வீட்டின் கீழே இருக்கும் நிலையில் ஜெய ஸ்ரீ தனது காதலன் மற்றும் அவனின் நண்பர்களுடன் மேல் மாடியில் ஒன்றாக இருப்பது வழக்கம்.
அதன்படி நேற்று இவர்கள் மாடியில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென கிஷோர் வேகமாக இறங்கி வெளியே சென்றுள்ளார். சில நிமிடங்களில் ஆ என்று சத்தம் கேட்டுள்ளது. அப்போது ஸ்ரீராமின் தாயார் மேலே சென்று பார்த்த போது ஜெய ஸ்ரீ மாடி படிகளின் கீழே தலையில் கடுமையான காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இரவு 8 மணி அளவில் தவறி விழுந்தார் என்று போலீசில் அந்த நண்பர்கள் முதலில் கூறி உள்ளனர். ஜெய ஸ்ரீ உடனே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் . அதன்பின் அரசு உயர் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட தீவிர ஆபரேஷனில் ஜெய ஸ்ரீ பலியாகிவிட்டார் என்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தலையில் மட்டுமே காயம் ஏற்பட்டு உள்ளது. தலையில் ரத்தம் வடிந்து அவர் பலியானது உறுதி செய்யப்பட்டது.
திருமணத்திற்கு கிஷோர் மறுப்பு: முன்னதாக அன்று மாலை நடந்த பேச்சுவார்த்தையில் ஜெய ஸ்ரீ திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு கிஷோர் மறுத்துவிட்டார். அதோடு கோபப்பட்டு அங்கிருந்த கண்ணாடியை கையால் உடைத்துள்ளார். இதையடுத்து அவர் அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல.. அதன்பின் சில நிமிடங்களில் மாடியில் இருந்து விழுந்து ஜெய ஸ்ரீ மரணம் அடைந்துள்ளார்.
எஸ்கேப் ஆன நண்பர்கள்: மருத்துவமனையில் ஜெய ஸ்ரீ பலியான சில நிமிடங்களில் கிஷோர் உட்பட எல்லா நண்பர்களும் அங்கிருந்து எஸ்கேப் ஆகி உள்ளனர். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீஸ் தீவிரமாக அந்த நண்பர்கள் குழுவை தேடி உள்ளனர். இன்னொரு நண்பன் ஸ்ரீகிருஷ்ணன் என்பவர் வீட்டில் அந்த குழு மொத்தமாக பதுங்கி இருந்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
பின்தலையில் மட்டும் காயம்: பின் தலையில் மட்டும் அடிபட்டு காயம் ஏற்பட்டு உள்ளது மற்ற இடங்களில் சின்ன காயம் கூட இல்லை என்பதால் ஜெய ஸ்ரீ உண்மையில் தவறி விழுந்தாரா.. அல்லது தற்கொலையா அல்லது கொலையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கிஷோர் குற்றவாளி: கிஷோர்தான் குற்றவாளி என்று ஜெய ஸ்ரீ பெற்றோர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மகாராணி போயிட்டியே.. லவ்வரும் நண்பர்களும் கூட்டாக கொன்னுட்டாங்களே என்று கதறியபடி ஜெய ஸ்ரீ பெற்றோர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications