"கேஸ்ல இருந்து ரிலீவ் பண்றேன்”.. லஞ்சம் வாங்கிய டிஎஸ்பியை கையும் களவுமாக கப்பென பிடித்த ஆபீசர்ஸ்!
திருச்சி: குற்றப் பத்திரிகையில் பெயர் சேர்க்காமலும், வழக்கிலிருந்து விடுவிப்பதற்கும் ஒரு லட்சம் கொடுக்குமாறு பத்திர எழுத்தரிடம் லஞ்சம் கேட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஆல்பர்ட் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் பூலாங்குடியை சேர்ந்த சிங்கமுத்து என்பவரின் மனைவி கீதா. இவர் ஆவண எழுத்தராக தொழில் செய்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டில் திருவெறும்பூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு வீட்டுமனை பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளார். குமார் பதிவு செய்த வீட்டு மனை சுந்தரம் என்பவருக்கு சொந்தமானது என்று சுந்தரம் புகார் அளித்ததன் பேரில் திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு தனிப்பிரிவு போலீசார் கடந்த 2021ஆம் ஆண்டு குமார் மற்றும் எட்டு நபர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த குற்ற வழக்கில் பத்திர எழுத்தர் கீதாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் 2021ஆம் ஆண்டே பத்திர எழுத்தர் கீதாவை விசாரித்து போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் பத்திர எழுத்தர் கீதாவை மீண்டும் அழைத்து நேற்று விசாரணை செய்துள்ளனர்.
பத்திர எழுத்தர் கீதாவை விசாரணை செய்த திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஆல்பர்ட், குற்றப் பத்திரிகையில் பெயர் சேர்க்காமலும், வழக்கிலிருந்து விடுவிப்பதற்கும் தனக்கு தனியாக ஒரு லட்சம் லஞ்சமாக கொடுக்குமாறு மிரட்டியுள்ளார் டிஎஸ்பி ஆல்பர்ட். லஞ்சம் கொடுக்க விரும்பாத பத்திர எழுத்தர் கீதா, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
கீதா அளித்த புகாரை அடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவருக்கு தாங்கள் சொல்வது போல செய்யுமாறு அறிவுறுத்தினர். அந்த ஆலோசனையின்படி, இன்று மாலை 3 மணியளவில் திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆல்பர்ட்டிடம் பத்திர எழுத்தர் கீதா ஒரு லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தை கொடுத்தார். அதனை டிஎஸ்பி ஆல்பர்ட்டும் பெற்றுக்கொண்டார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் டிஎஸ்பி ஆல்பர்ட்டை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். பின்னர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications