தோளில் "பச்சை துண்டு"டன் டக்குனு நுழைஞ்சிட்டாரு.. அப்படியே மலைத்த திருச்சி.. யார்ன்னு பாருங்க..சபாஷ்
திருச்சி: காவிரி விவகாரத்தில், கர்நாடக அரசு செய்துவரும் நடவடிக்கைகளை கண்டு தமிழக விவசாயிகள் நொந்து போயுள்ள நிலையில், தொடர் போராட்டங்கள் டெல்டாவில் வலுத்து வருகின்றன. இந்நிலையில், திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவு கிடைத்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
காவிரி நதிநீர் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.. கர்நாடக அரசுக்கு எதிரான போராட்டங்களை தமிழக விவசாயிகள் முன்னெடுத்தால், கர்நாடக அரசும் பதிலுக்கு போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகிறது.

காவிரி பிரச்சனை: ஆனாலும், தமிழக விவசாயிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்பதில் மிக தீவிரமாக இருக்கிறார்கள்.. அதனால்தான், நேற்றுகூட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சியில் மனிதசங்கிலி நடத்தப்பட்டது.. காவிரி விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட், காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுகளை மதிக்காத கர்நாடகாவை கண்டித்து இந்த மனிதசங்கிலி போராட்டம் நடந்தது.
மேலும், நெய்வேலி கூடங்குளம் மின் நிலையங்களில் இருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், நதிநீர் இணைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்திட வேண்டும், தமிழகத்தின் ஆறுகள், ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் மனிதசங்கிலி நடந்தது. போராட்டம் துவங்கியதுமே, விவசாயிகள் காவிரி முக்கொம்பு பாலத்தில் ஊர்வலமாக சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
சர்ப்ரைஸ்: இந்நிலையில், திருச்சி மாவட்ட கலெக்டரே, ஒரு சர்ப்ரைஸ் தந்துவிட்டார். வழக்கம்போல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவு துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் வந்திருந்தனர்.. இவர்களை தவிர, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோரும் திரண்டிருந்தனர்.

பச்சை துண்டு: இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்குவதற்காக, கலெக்டர் பிரதீப்குமார் உள்ளே வந்தார்.. அப்போது, அவரது தோளில் பச்சை துண்டு அணிந்திருந்தார்.. விவசாயத்தை போற்றும்விதமான பச்சை துண்டு அணிந்தபடியே, விவசாயிகளின் மொத்த குறைகளையும் கேட்டறிந்தார்.. இது அங்கிருந்த விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
கலெக்டரிடம் விவசாயிகள், "வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது.. திருச்சி மாவட்டத்திலுள்ள, குளம், ஏரிகளை தண்ணீர் நிரப்புவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்... சம்பா சாகுபடி போதிய தண்ணீர் இல்லாமல் முற்றிலும் கருகி நாசமானதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், பெருவளை வாய்க்கால், உய்ய கொண்ட வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் முழுமையாக புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மகிழ்ச்சியில் விவசாயிகள்: அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாக கலெக்டரும், அங்கிருந்த விவசாயிகளுக்கு உறுதி தந்தார். கூட்டத்துக்கு பச்சை துண்டு அணிந்துவந்த கலெக்டரின் போட்டாக்கள்தான், இணையத்தை கலக்கி கொண்டிருக்கின்றன.
-
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications