Trichy Dubai: திருச்சி டூ துபாய் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளறு.. 160 பயணிகளுடன் அவசரமாக தரையிறக்கம்
திருச்சி: திருச்சியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் விமானம் மீண்டும் திருச்சிக்கே திருப்பி விடப்பட்டது. திருச்சியில் விமானம் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் இன்று வழக்கம் போல புறப்பட்டு சென்றது. விமானத்தில் 160 பயணிகள் பயணம் செய்தனர்.

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
திருச்சியில் இருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில் நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து, உடனடியாக விமானம் திருச்சிக்கே திருப்பிவிடப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் முன் சிறிது நேரம், விமானம் வானத்தில் வட்டமடித்தது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மீண்டும் திருச்சிக்கே திருப்பிவிடப்பட்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். சிறிது நேரத்தில் அனுமதி கிடைத்ததும், திருச்சியில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
தயாராக இருந்த மருத்துவ குழுவினர்
பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக விமானம் அடிக்கடி தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு தாமதம் ஆவது பயணிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுப்பதாக உள்ளது.
விமானம் தரையிறங்கியதும், ஏர்போர்ட்டில் தயாராக இருந்த மருத்துவ குழுவினர் மற்றும் தீ அணைப்பு துறையினர், அவசர அவசரமாக வந்து பயணிகளை பத்திரமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சீர் செய்யும் பணியும் உடனடியாக தொடங்கியது.
விமான நிலைய அதிகாரிகள் விளக்கம்
முழுமையான ஆய்வுக்கு பிறகே விமானத்தில் ஏற்பட்ட கோளாறு பற்றிய முழு விவரம் தெரியவரும் என்று திருச்சி விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன. விமானம் வானில் வட்டமடித்த பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "விமானத்தில் சிறிய தொழில்நுட்ப கோளாறாக இருந்தாலும், பயணிகள் பாதுகாப்பே எங்களுக்கு முக்கிய நோக்கமாகும். விமானிகள் உரிய நேரத்தில் எடுத்த முடிவுகள் பெரிய விபத்தைத் தவிர்த்தது" என்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications