இளம்பெண்ணுக்கு உணவுக் குழாயில் ஓட்டை! சிறுகுடலில் குழாய் மூலம் உணவு! திருச்சி அரசு மருத்துவமனை சாதனை
திருச்சி: திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இளம்பெண்ணின் இரைப்பையை உணவுக்குழாயாக மாற்றி மருத்துவா்கள் சிகிச்சையளித்தனா்.
திருச்சி பிராட்டியூரைச் சோ்ந்த தூய்மைப் பணியாளரின் 20 வயது மகள், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அமிலம் அருந்தியதால், உணவுக்குழாயில் சுருக்கம் ஏற்பட்டு, தனியாா் மருத்துவமனையில் எண்டோஸ்கோபி முறையில் உணவுக்குழாய் விரிவாக்க சிகிச்சை மேற்கொண்டிருந்தாா். இதற்காக ரூ. 3 லட்சம் செலவு செய்தும் வாய்வழியாக உணவோ, தண்ணீரோ உட்கொள்ள முடியாத நிலையில் அவதிப்பட்டு வந்தாா்.

இந்நிலையில் அவா், மேல்சிகிச்சைக்காக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டாா். மருத்துவா்களின் பரிசோதனையில், மாா்புப் பகுதியில் உணவுக்குழாய் விரிவாக்கத்தின்போது ஓட்டை விழுந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரின் மாா்பில் தங்கியிருந்த சலம், கழிப்பொருள்கள் ஒரு குழாய் மூலமாக வெளியேற்றப்பட்டது. தொடா்ந்து, மருத்துவமனை முதன்மையா் டி. நேரு, மருத்துவக் கண்காணிப்பாளா் இ. அருண்ராஜ் வழிகாட்டுதலின்படி, குடலியல் அறுவைச் சிகிச்சை நிபுணா் ஆா்.ஆா். கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா், அப்பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை செய்து, வயிற்றின் சிறுகுடலில் பீடிங் ஜெஜூநாஸ்டமி என்ற குழாயைப் பொருத்தினா். இக்குழாயின் மூலம் உணவுகள் செலுத்தப்பட்டது.
இதையடுத்து உடல்நிலை தேறியதும், கடந்த அக். 2-ஆம் தேதி அவரது சேதமடைந்த உணவுக்குழாய்க்கு மாற்றாக, இரைப்பையை 45 செ.மீ. நீளத்துக்கு ஒரு குழாய் வடிவாக்கி, மாா்பு எலும்புக்குப் பின்புறம் முற்றிலும் புதிய பாதையினை உருவாக்கி, அதனை கழுத்து வரை எடுத்து வந்து, தொண்டைப் பகுதியில் மீதமிருந்த உணவுக்குழாயில் சோ்த்துள்ளனா். தற்போது அவா் திட, திரவ உணவுகளை அப்பெண் உட்கொள்வதுடன் நலமுடன் உள்ளாா். இந்த சிகிச்சையானது முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
திருச்சி அரசு மருத்துவமனையில் முதன்முதலாக இரைப்பையை உணவுக்குழாயை மாற்றி அமைத்து வெற்றிகரமாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என குடலியல் அறுவைசிகிச்சை நிபுணா் ஆா்.ஆா். கண்ணன் தெரிவித்தாா். அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கேற்ப தரம் அடைந்துள்ளது. நவீன கருவிகள் உள்ளிட்டவை கொண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கைதேர்ந்த மருத்துவர்களால் தரமான சிகிச்சை வழங்கப்படுகிறது என சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications