நடத்தையில் சந்தேகம்.. நள்ளிரவில் மனைவி, மகன் மீது கல்லைத் தூக்கிப்போட்டு கொன்ற கணவன்
திருச்சி: திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கணவன் கல்லை தூக்கி போட்டு கொன்றுள்ளார். அத்துடன் மகனையும் கல்லை போட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
மனைவி,மகன் இருவரையும் கல்லால் அடித்துக் கொன்றுவிடடு தப்பியோடிய கணவனை சோமரசம்பேட்டை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட அல்லித்துறையில் வசித்து வருபவர் மாரியப்பன் (வயது 52). இவருக்கு ராதிகா (வயது 36) என்ற மனைவியும், ரோகித் (வயது 14) கீர்த்திவாசன் (வயது 8 ) என்ற இரு மகன்களும் உள்ளனர்.

அடிக்கடி தகராறு
கூலித் தொழிலாளியான மாரியப்பன் கடந்த சில தினங்களாக சரியான வேலை கிடைக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட மாரியப்பன் அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கல்லை போட்டு கொலை
இந்த நிலையில் மாரியப்பன் இன்று அதிகாலை 3 மணியளவில் தனது குடிசை வீட்டின் எதிரே பாயில் படுத்திருந்த மனைவி, மகன் கீர்த்திவாசன் இருவர் தலையிலும் கல்லை போட்டு நசுக்கி கொலை செய்துவிட்டு மகன் ரோகித்துடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

போலீஸ் வலைவீச்சு
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோமரசம்பேட்டை போலீசார் இறந்த உடல்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாரியப்பன் வலைவீசி தேடி வருகின்றனர்.

தண்டனை முடிந்து திருமணம்
இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தப்பியோடிய மாரியப்பன் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் 10 வருடம் தண்டனை பெற்று தண்டனை காலம் முடிந்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்தார் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
-
மனைவி - மகனை கொன்று தற்கொலை செய்த ஜவுளிக்கடை ஓனர்! மகளிர் இலவச பஸ் பயண திட்டத்தால் விபரீத முடிவாம் -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
கொடூரம்.. பெரம்பூர் ஸ்டேஷனில் சூட்கேஸில் இருந்த உடல்.. தலையை செங்கல்பட்டு ஏரியில் மீட்ட போலீசார்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications