டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டில் அசிங்கம்.. போன் முழுக்க அங்கங்கள்.. 68 வயசு சத்தியமூர்த்தியை பாருங்க
திருச்சி: டைப்ரைட்டிங் கற்றுக்கொள்ள ஆசை ஆசையாக அந்த இன்ஸ்டிடியூட்டுக்கு போனாராம் மாணவி.. கடைசியில் வசமாக சிக்கிவிட்டார் சத்தியமூர்த்தி

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ளது நவல்பட்டு அண்ணாநகர் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் சத்தியமூர்த்தி.. 68 வயதாகிறது.. நவல்பட்டு அண்ணாநகர் பகுதியிலேயே, இவர் ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் வைத்து நடத்தி வருகிறார்.
இளம்பெண்கள்: நகரின் மையப்பகுதியில் இந்த இன்ஸ்டிட்யூட் இருப்பதால், ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவிகள், திருமணமான இளம்பெண்கள் இங்கு டைப்ரைட்டிங் கற்றுக்கொள்வதாக வருகிறார்கள்.. அந்தவகையில், காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த இன்ஸ்டிட்யூட் செயல்பட்டு வருகிறது.
இந்த இன்ஸ்டிடியூட்டில், டைப்ரைட்டிங் கற்றுக்கொள்வதற்காக ஒரு கல்லூரி மாணவி வந்திருக்கிறார்.. அவரிடம் சத்தியமூர்த்தி பாலியல் தொல்லையை தந்ததாக தெரிகிறது.. இதனால், அதிர்ச்சடைந்த அந்த மாணவி, டைப்ரைட்டிங் கிளாசுக்கு வருவதையே நிறுத்திவிட்டார்.. அத்துடன், தன்னுடைய பெற்றோரிடம் நடந்ததையெல்லாம் சொல்லி கதறி அழுதுள்ளார். இதைக்கேட்டு, அதிர்ந்த பெற்றோர், திருவெறும்பூர் மகளிர் போலீசில் புகார் தந்திருக்கிறார்கள்.
புகார்கள்: இந்த புகாரின்பேரில், போலீசாரும் சத்தியமூர்த்தியிடம் விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போது, அவரிமிருந்த செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது, மிரண்டு போய்விட்டனர்.. அந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டிக்கு வரும் பல இளம்பெண்களுக்கு, சத்தியமூர்த்தி குறி வைத்திருப்பது தெரியவந்தது.. அவர்களது போட்டோக்கள், வீடியோக்களை செல்போனில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். மாணவிகள் மட்டுமல்லாமல், திருமணமான பெண்களின் போட்டோக்களும் அந்த போனில் இருந்துள்ளது.
அதாவது, அந்த மாணவிகளுக்கு தெரியாமலேயே, அங்கங்களை ஆபாசமாக போட்டோ, வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதை எந்நேரமும் ரசித்து கொண்டிருப்பாராம்.. இதெல்லாம் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, போக்சோவில் சத்தியமூர்த்தியை கைது செய்து, ஜெயிலிலும் அடைத்திருக்கிறது மகளிர் போலீஸ்.
பெல் நிறுவனம்: 68 வயதாகும் சத்தியமூர்த்தி, துவாக்குடி பெல் நிறுவனத்தில் வேலைபார்த்து ரிடையவர் ஆனவராம்.. ஆனால், வேலையில் இருக்கும்போதே, அதாவது 30 வருடத்துக்கு முன்பே இந்த இன்ஸ்டிடியூட்டை ஆரம்பித்து நடத்தி கொண்டிருக்கிறார்.
இத்தனை வருடங்கள் தொடர்ந்து நடத்தி வருவதால், சத்தியமூர்த்தியால் பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.. அவரிடம் இனிமேல் விசாரணையை விரிவுபடுத்தினால்தான், உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் வைத்து, அந்த ஏரியாவிலேயே ஃபேமஸ் ஆகியிருந்த சத்தியமூர்த்தி, இப்போது கேவலப்பட்டு, களி திண்ண ஜெயிலுக்கு போயிருக்கிறார்.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications