துரை வைகோ உறுதியால்.. சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில்!
திருச்சி: திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ சின்னம் இல்லாமல் பிரச்சாரத்தில் சுணக்கம் காட்டி வரும் நிலையில், இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு சூறாவளியாக சுற்றி வந்துகொண்டிருக்கிறார் அதிமுக வேட்பாளர்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஒட்டுமொத்தமாக லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க துவங்கிவிட்டது. தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் 27ம் தேதி முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.
39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில்
664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1085 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். இதில் 56 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. குறைந்த பட்சமாக நாகை லோக்சபா தொகுதியில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 30ஆம் தேதி நாளை கடைசி நாள் ஆகும்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக மற்றும் பல்வேறு கட்சியினர் சுயேசைகள் உட்பட 48 பேர் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இதில் நேற்று நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையில் 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு தற்போது 38 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
நாளை வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டால் எத்தனை பேர் இறுதியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார்கள் என்று மதியம் தெரிந்து விடும். இந்நிலையில் திருச்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கருப்பையா இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு சூறாவளியாக திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்து வருகிறார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக பம்பரம் சின்னம் கிடைக்காததால் அவர்கள் பிரச்சாரத்தில் சுணக்கம் ஏற்பட்டு தற்போது வேட்பாளராக போட்டியிடும் துரை வைகோ திருச்சியில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்களையும், வணிகர்கள், மத தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
தங்களுக்கு சின்னம் கிடைக்கப் பெற்ற உடன் தங்களது பிரச்சாரத்தில் சூடு பிடிக்கும் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுகவினர் அறிவுறுத்தியும், தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என உறுதியாக தெரிவித்து விட்டார் துரை வைகோ.
நாளை மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது, வேட்பாளர்களின் சின்னம் அறிவிக்கப்படும். துரை வைகோ, தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் சின்னத்தை கேட்டிருப்பதாகத் தெரிகிறது. அவருக்கு எந்த சின்னம் ஒதுக்கப்படும் என்பது நாளை மாலை தெரிந்துவிடும். அதன்பிறகு துரை வைகோவின் பிரச்சாரம் சூடுபிடிக்கும் எனத் தெரிகிறது.
டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் செந்தில்நாதன் குக்கர் சின்னத்திற்கும், நாம் தமிழர் கட்சியில் போட்டியிடும் ராஜேஷ் மைக் சின்னத்திற்கும் வாக்கு கேட்டு தங்களது அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications