Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்யாணம் ஆகாத விரக்தியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகன்.. அப்பாவிடம் தகராறு.. நடந்த கொடூரம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருமணமாகாத விரக்தியில் மனநலம் பாதிக்கப்பட்ட மகன், தந்தையிடம் சொத்தை பிரித்து கேட்டு தகராறில் ஈடுபட்ட போது, திடீரென தந்தையை குழவிக் கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி, ஏர்போர்ட், அழகர் தெருவைச் சேர்ந்தவர் நந்தகோபால் (81).
இவர் திருச்சி பெல் (BHEL) தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி லீலாவதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.

இவர்களுக்கு கிருஷ்ணவேணி, கீதா, ஹேமா, பிரேமா என்ற நான்கு மகள்களும், மற்றும் ரவி, பிரபோதசந்திரன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
இதில் மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது மற்றும் ஒரு மகனுக்கு மட்டும் திருமணம் நடந்துள்ளது.
தந்தை நந்தகோபால் தனது மகன் பிரபோதசந்திரனுடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தகராறு

தகராறு

இந்நிலையில திருமணமாகாத விரக்தியில் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டடது. அதற்காக திருச்சி தனியார் மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
சென்னையில் நந்தகோபாலின் இன்று 'பேத்திக்கு நடைபெற உள்ள பூப்பு நீராட்டு விழா தொடர்பாக நேற்று இரவு தந்தை, மகன் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது,

தந்தை கொலை

தந்தை கொலை

மேலும், தனக்கு திருமணம் செய்து வைக்கும் படியும், சொத்தில் தனது பங்கை பரித்து கொடுக்க கேட்டும் தந்தையிடம் பிரபோதசந்திரன் அக்கடி தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில் நேற்று நடந்த சண்டையின் போது
ஆத்திரத்தில் வீட்டிலிருந்த குழவிக் கல்லை எடுத்து தந்தையின் முன்னந்தலையில் அடித்துள்ளார் இதில் மயங்கி விழுந்தார், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலே நந்தகோபால் மரணம் அடைந்துள்ளார்.

விசாரணை

விசாரணை

தந்தை இறந்ததை கண்ட மகன் பிரபோதசந்திரன் திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்திற்கு சென்று சம்பவத்தை கூறி சரணடைந்தார்.
சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

பரபரப்பு

மேலும், கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து மகன் பிரபோத சந்திரனை கைது செய்துள்ளனர்.
திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த மகன், சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+