சட்டமெல்லாம் மாறிடுச்சு..சேட்டை பண்ண அவ்வளவு தான்! 300 ரவுடிகள் ஒரே இடத்தில்! எஸ்பி கொடுத்த வார்னிங்
திருச்சி: தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் நேற்று பதவியேற்ற நிலையில் தலைமைச் செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அப்போது சட்டம் ஒழுங்கை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில் திருச்சியில் 300க்கும் மேற்பட்ட ரவுடிகளை அழைத்து எச்சரித்து இருக்கிறார் திருச்சி மாவட்ட எஸ்பியான செல்வ நாகரத்தினம்.
தமிழ்நாடு முதலமைச்சராக நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக்கொண்டார். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் கூறியிருந்த நிலையில், மாலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
அப்போது போதைப்பொருள் ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இது தொடர்பாக மாவட்ட எஸ்பிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என சொல்லி இருந்தார். இதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள எஸ்பிகளுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு
இந்த நிலையில் திருச்சியில் 300க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஒரே இடத்தில் வைத்து எச்சரித்து இருக்கிறார் திருச்சி எஸ் பி ஆன செல்வநாகரத்தினம். திருச்சியில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் உட்கோட்ட காவல் அலுவலர்கள் மூலம் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் (ரவுடி பரேடு) ஆஜர்படுத்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அறிவுறுத்தியிருந்தார்.
திருச்சி ரவுடி பரேடு
அதனடிப்படையில் சரித்திரபதிவேடு குற்றவாளிகள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆஜர் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். இந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் ஆஜர் அணிவகுப்பை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒவ்வொரு உட்கோட்டம் வாரியாக தணிக்கை செய்து. அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
செல்வ நாகரத்தினம் எச்சரிக்கை
அதன்பிறகு, வந்திருந்த 364 சரித்திரபதிவேடு குற்றவாளிகளையும் மைதானத்தில் உட்கோட்டம் வாரியாக நிறுத்தி அவர்களுக்கு ரவுடி பரேடு நடத்தப்பட்ட விபரம் குறித்தும், அவரவர் குடும்ப சூழ்நிலை மற்றும் குழந்தைகளை கருத்தில் கொண்டு, எவ்வாறு அவரவர் நடத்தைகளை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு மாற்றி கொள்ளாத பட்சத்தில் காவல் துறையின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதை பற்றியும் மிக தெளிவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுத்துரைத்தார்.
சரித்திர பதிவேடு குற்றவாளிகள்
அதன்பின்னர், ஒவ்வொரு சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பதிவேடுகளையும் அந்த காவல் ஆய்வாளர்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு, குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டது. இதன்மூலம் வந்திருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தாங்கள் இனிவரும் காலங்களில் எந்தவிதமான குற்ற சம்பவங்களிலும் ஈடுபடாமல் தத்தம் குடும்பத்தையும், குழந்தைகளையும் நல்ல முறையில் பராமரிப்பேன் என்ற நிலைப்பாட்டுடன் சென்றனர்.
ஆஜர் அணிவகுப்பு
இனி வரும் காலங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் யாரேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இதுபோன்ற சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் ஆஜர் அணிவகுப்பு (HS Parade) இதுநாள் வரை திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் நடைபெறாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications