'சித்தா' 2வது முறையாக பார்த்து விடியற்காலையில் தூக்கம் வராமல் எழுதிய பதிவு இது.. திருச்சி சிவா
திருச்சி: இரண்டாவது முறை "சித்தா" படம் பார்த்துவிட்டு தாமதமாக உறங்கி விடியற்காலையில் படத்தின் நினைப்பு வந்து மீண்டும் தூக்கம் வராமல் எழுதியது இது என்று உருக்கமான பதிவினை திருச்சி சிவா எம்பி வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் சித்தா. நடிகர் சித்தார்த்தே ஏதாகி என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியாகியது.

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை பற்றிய கதையை எதார்த்த சினிமாவாக எடுத்திருக்கிறார்கள். இந்த படம் ரசிர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.
சிறார் பாலியல் வன்முறையை எப்படித் தடுப்பது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவுவது என்பது குறித்த புரிதலை, அதிகரிக்க அனைவரும் பார்க்க வேண்டிய படம் 'சித்தா' என்று படம் பார்த்த ரசிகர்கள் கூறினார்கள்.
திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா எம்பி, சித்தா படம் குறித்து வெளியிட்டுள்ள பதிவில், இரண்டாவது முறை "சித்தா" படம் பார்த்துவிட்டு தாமதமாக உறங்கி விடியற்காலையில் படத்தின் நினைப்பு வந்து மீண்டும் தூக்கம் வராமல் எழுதியது இது!
சமுதாயத்தில் படர்ந்து கொண்டிருக்கும் ஒரு மாபாதகத்தை பார்ப்பவர்கள் மனம் பதறப் பதற உணர்த்திருக்கும் படம் சித்தா.
தூக்கம் தொலைவதற்கு காரணமான இந்த சினிமாவை மீண்டும் பார்க்க துணிவு இல்லை.. அவசியமும் இல்லை. ஆனால் மற்றவர்கள் ஒருமுறையாவது இந்தப் படத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
சித்தார்த் என்ற ஒரேயொரு அறிமுகமான நடிகரைத் தவிர அனைவரும் புதுமுகங்கள் ஒன்று கூட சினிமா முகம் கிடையாது. ஆனால் நடிப்பினால் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறார்கள்.

குழந்தை "பொன்னி" பாதிப்புக்கு முன் குழந்தைத்தனமாகவும் பாதிப்புக்குப் பின் அதிர்ச்சியும் கோபமும் கலந்த வேறுவிதமான முகக் குறிப்புடன் அதிகம் பேசாமலே நிறைய புரிய வைக்கிறாள்.
இயக்குனரை ஆரத்தழுவி இதே தமிழ் திரையுலகிற்கு இன்னொரு பாலச்சந்தர் என நெற்றியில் முத்தமிட வேண்டும்.
கொஞ்சம் சிரமம் தான். ஆனால் யதார்த்தம் என்பதால் எச்சரிக்கை உணர்வு எல்லோருக்கும் தேவை என்பதால் பெற்றோர் அவசியம் பிள்ளைகளோடு சென்று பார்த்து வந்தால் படத்தை அங்கீகரித்து பாராட்டியதாக அமையும்"இவ்வாறு கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications