யாரையும் விட மாட்டேன்.. 100% முடிவுரை எழுதுவேன்.. திருச்சி எஸ்பி வருண் சபதம்.. சீமானுக்கு செக்
திருச்சி: எனக்கு எதிரான போஸ்ட்களை பதிய, தூண்டி விட்ட நபர்களையும் நீதித்துறையின் முன் கொண்டு வந்து நிறுத்துவேன். வெளிநாடுகளில் இருந்து ஆபாசமாக பதிவு செய்யும் போலி ஐடிகளையும் விடப்போவதில்லை. சட்டத்தின் மேல், நீதித்துறையின் மேல், 100% எனது நம்பிக்கையை வைக்கிறேன், என்று திருச்சி எஸ்பி வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் முக்கியமான சில போஸ்டுகளை வெளியிட்டு உள்ளார்.
திருச்சி எஸ்பி வருண்குமார் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோர் எஸ்பி வருண்குமார் மீது அவதூறாகப் பதிவிட தூண்டியதாக திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதில் நாம் தமிழர் கட்சியின் டாப் அதிகாரிகள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
என்ன நடந்தது?: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவ்வப்போது முதல்வர் குறித்தும், ஆட்சி குறித்தும் அவதூறாக பேசி கைதாவது வழக்கம். தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதன்படி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சார மேடையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார். நாம் தமிழர் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சென்ற சாட்டை துரைமுருகன் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்து அவதூறாக பேசினார். முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்து, கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார்.
ஆடியோ லீக்: இதையடுத்து சாட்டை துரைமுருகன் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் அதே சமயம் அவரின் போனில் இருந்து சீமான் பேசியதாக பல ஆடியோக்கள் வெளியாகின. சமீபத்தில் வெளியான ஆடியோ ஒன்றில் சீமான் காளியம்மாளை விமர்சனம் செய்வது போல் ஆடியோ இருந்தது. அதில், காளியம்மாள் எல்லாம் தட்டி விடலாம். அவர் பெரிய ஆள் இல்லை. அவர் ஒரு பிசிறு. காளியம்மாள் எல்லாம் எனக்கு ஒண்ணுமே இல்லை. அவள் எல்லாம் வெறும் பிசிறு அவ்வளவுதான். இப்போது வந்துவிட்டு ஆடிக்கொண்டு இருக்கிறாள். வளர விட கூடாது என்று சீமான் பேசுவது போன்ற ஆடியோ வெளியானது.
மறுத்த நாம் தமிழர் - ஒப்புக்கொண்ட சீமான்: ஆனால் இந்த விவகாரத்தில்.. ஆடியோ வெளியான சமயத்தில் இதை நாம் தமிழர் பலர் மறுத்தனர். அதாவது இதை சீமான் பேசவில்லை என்று கூறி மறுத்தனர். இது ஏஐ என்றும் கூட விளக்கம் கொடுத்தனர். ஏஐ வைத்து இப்படி எல்லாம் ஆடியோ உருவாக்கலாம் என்றனர்.
இது சீமானின் பேச்சு கிடையாது என்று கடுமையாக பதில் வாதம் வைத்தனர். . இப்படிப்பட்ட நிலையில்தான் காளியம்மாவை அநாகரீகமாக பேசியது பற்றி வெளியான ஆடியோக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். நாம் தமிழர் கஷ்டப்பட்டு மறுக்க.. சீமான் தான்தான் பேசினேன் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
பிசிறு அடிக்குது: பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், தீடீரென இந்த வெண்ணெய்களுக்கு காளியம்மாள் மீது பாசம். டேய்... அவள்தான் மயிலாடுதுறையில் போட்டியிட்டாளே.. ***** அப்போதே அவளை ஜெயிக்க வேண்டியது தானே. வெண்ணெய்களா அப்போது ஏன் ஓட்டு போடவில்லை.
விமர்சனம்: இதனையடுத்து தமது செல்போனில் இருந்துதான் திருச்சி எஸ்பி வருண்குமார் திட்டமிட்டே இந்த பதிவு செய்யப்பட்ட போன் உரையாடல்களை வெளியிட்டு வருவதாக சாட்டை துரைமுருகன் குற்றம் சாட்டினார். அத்துடன், திருச்சி எஸ்பி வருண்குமார் பெயரைக் குறிப்பிடாமல் ஜாதிய நோக்கத்துடன் அவர் செயல்படுவதாக சீமான் பொதுவெளியில் பகிரங்கமாகவும் விமர்சித்தார். சில நாம் தமிழர் கட்சியினர் வருண் குமார் குடும்பம் பற்றியும் மோசமாக பேசினர்.
புகார்: இதில்தான் திருச்சி எஸ்பி வருண்குமார் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் வைக்கப்பட்டு உள்ளது. அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 22 பேர் மீது திருச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது பற்றி வருண் குமார் செய்துள்ள போஸ்டில், அரசியலுக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது வீட்டில் உள்ள பெண்களையும், எனது குழந்தைகளையும், எனது குடும்பத்தாரையும் அவதூறு பேசி, மிரட்டல் விடுத்த நபர்களை விடமாட்டேன். சட்டத்தின் முன்னால் கண்டிப்பாக கொண்டு வந்து நிறுத்துவேன். என் சட்டப் போராட்டம் தொடரும்.
இதை தூண்டி விட்ட நபர்களையும் நீதித்துறையின் முன் கொண்டு வந்து நிறுத்துவேன். வெளிநாடுகளில் இருந்து ஆபாசமாக பதிவு செய்யும் போலி ஐடிகளையும் விடப்போவதில்லை. சட்டத்தின் மேல், நீதித்துறையின் மேல், 100% எனது நம்பிக்கையை வைக்கிறேன். ஆபாசத்திற்கும் அவதூருக்கும் இறுதி முடிவுரை எழுதுவோம், என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications