"இந்த குழந்தைக்கு அப்பா எங்கே".. துளைத்தெடுத்த உறவுகள்.. அரசு பெண் டாக்டர் தூக்கிட்டு தற்கொலை
அரசு பெண் மருத்துவர் திருச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
திருச்சி: குழந்தையின் அப்பா எங்கே? என்று உறவினர்கள் துளைத்தெடுத்ததால், பெண் டாக்டர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் துயரத்தை தந்து வருகிறது.
திருச்சி சுப்ரமணியபுரம் ஏரிக்கரை ரோட்டை சேர்ந்தவர் சஞ்ஜினி.. 30 வயதாகிறது.. இவர் ஒரு டாக்டர்.. மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவராக, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதைதவிர, சுப்பிரமணியபுரம் பகுதியில் தனியாக கிளினிக் ஒன்றையும் வைத்து நடத்தி வந்துள்ளார்.. இவரது கணவர் பெயர் கோகுல்.. துறையூரை சேர்ந்தவர்.. இவரும் ஒரு டாக்டர்..

வழக்கு
மற்றொரு புறம் விவாகரத்து பெறுவதற்கான வழக்கும் தொடர்ந்துள்ளார். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில் அவரது உறவினர் குடும்பத்தில் காதுகுத்தும் நிகழ்ச்சி நடந்துள்ளது.. இதற்காக குழந்தையை தூக்கி கொண்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.. ஏராளமான குடும்ப உறவினர்களும் அங்கே வந்திருந்தனர்.. அப்போது, சஞ்ஜினியிடம் குழந்தையின் அப்பா எங்கே? என்று கேட்டுள்ளனர்..

அப்பா எங்கே?
அவர்களுக்கு தம்பதி பிரிந்த விஷயம் தெரியாது என்பதால், கணவரை பற்றியே விசாரித்து கொண்டிருந்தனர்.. ஒவ்வொருவரும் குழந்தையின் அப்பா எங்கே என்று கேட்டு கொண்டே இருந்ததால், அந்த நிகழ்ச்சியிலேயே மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார் சஞ்ஜினி.. வீட்டுக்கு வந்தும் இதை நினைத்தே கவலைப்பட்டு கொண்டிருந்தார்..

தற்கொலை
இந்நிலையில் நடுராத்திரி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இது குறித்து தகவலறிந்த கேகே நகர் மகளிர் போலீசார் சஞ்ஜினியின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு விசாரணையையும் கையில் எடுத்தனர்.. காதுகுத்து நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் கணவர் எங்கே என்று ஒரே மாதிரியாக கேட்கவும்தான் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.. இது தொடர்பாக மேலும் விசாரணை நடக்கிறது..

விசாரணை
பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இப்படித்தான் 2 நாளைக்கு முன்பும் கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி விடுதியில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.. தொடர்ந்து படித்த டாக்டர்களே இப்படி தற்கொலையில் ஈடுபட்டு வருவது திருச்சி மாவட்டத்தில் கவலையை தந்து வருகிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications