ஆன்லைன் ரம்மி.. ரூ.4 லட்சத்தை இழந்த கூலி தொழிலாளி.. திருச்சியில் மேலும் ஒருவர் தற்கொலை!
திருச்சி: ஆன்லைன் ரம்மியால் சுமார் ரூ.4 லட்சம் வரை பணத்தை இழந்த கூலி தொழிலாளியான வில்சன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பணத்தை இழப்பதோடு, தற்கொலை செய்து கொள்வதால் தமிழ்நாட்டில் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் பண இழப்பை ஏற்படுத்துவதோடு, உயிரையும் குடித்து வரும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக அனைவரும் குரல் எழுப்பி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வலியுறுத்தி அரசியல் கட்சியினரும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

திருப்பு அனுப்பிய ஆளுநர்
இதனிடையே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி, சுமார் 4 மாதங்கள் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கிடப்பில் போட்டு, தமிழ்நாடு சட்டசபைக்கே திருப்பி அனுப்பினார். அதேபோல் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா
இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு தரப்பில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் விளக்கம் அளித்திருந்தது.

திருச்சியைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த திருச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருச்சி மாவட்டம் அருகே அஞ்சல்காரன்பட்டியைச் சேர்ந்த 26 வயதாகும் கூலி தொழிலாளியான வில்சன், ஆன்லைன் ரம்மியை தீவிரமாக விளையாடி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான அவர், கடன் பெற்று சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக சுமார் 4 லட்சம் ரூபாய் வரை பண இழப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்தடுத்து இருவர் தற்கொலை
இந்த கடனை கொடுக்க முடியாததால் மன உளைச்சலில் இருந்த அவர், திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த உறவினர்கள், அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வில்சன் உயிரிழந்தார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஆன்லைன் ரம்மியால் ரூ.16 லட்சம் பணத்தை இழந்து நேற்று தற்கொலை செய்த நிலையில், இன்று திருச்சியைச் சேர்ந்த மேலும் ஒருவர் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications