அப்பனே விநாயகா! சிபிஐ கேட்ட கோப்புகளை பிள்ளையார்பட்டி கோயிலில் வைத்து புஸ்ஸி ஆனந்த் வழிபாடு
திருச்சி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஆவணங்களை வைத்து தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிபாடு நடத்தினார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக் கூட்டம் நடந்தது. அப்போது அங்கு விஜய்யை பார்க்க அதிகளவு கூட்டம் கூடியது. இதனால் நெரிசல் ஏற்பட்ட நிலையில் 41 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 100- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு சார்பில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அது போல் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. ஆனால் இவற்றை எதிர்த்த தவெகவினர், உச்சநீதிமன்றத்தை நாடி சிபிஐ விசாரணை கோரினர்.
அவர்கள் கேட்டது போலவே உச்சநீதிமன்றமும், கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையை அடுத்த பனையூரில் கடந்த வாரம் சிபிஐ அதிகாரி ஒருவர் நேரில் வந்து விஜய்யின் பிரச்சார வாகனத்தை பார்வையிட்டார். மேலும் அதில் பதிவான சிசிடிவி காட்சிகளை கேட்டு சம்மன் கொடுத்துவிட்டு சென்றார்.
இந்த நிலையில் கரூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான தவெக பனையூர் அலுவலக உதவியாளர் குரு மற்றும் தவெக வழக்கறிஞர் அணியின் திருச்சி மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் அரசு ஆகியோர் சிசிடிவி ஆதாரங்களை அளித்தனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 3ஆவது நாளாக நேற்றைய தினம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் உள்பட 8 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த இரு தினங்களாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உரிமையாளர் உள்பட 19 பேரிடம் விசாரணை நடந்த நிலையில் சனிக்கிழமையான நேற்று 8 பேரிடம் விசாரணை நடந்தது.
இந்த நிலையில் மேலும் சில கோப்புகளை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க தவெகவுக்கு சம்மன் கிடைத்துள்ளதாம். இதனால் அவற்றை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஆவணங்களை வைத்து வழிபாடு நடத்தினார்.
-
2500+அனைத்து பஸ்களிலும் ஃப்ரீ..விஜய் பிறந்தநாளில் பெண்களுக்கு கிஃப்ட்? கோட்டையில் ரெடியாகும் ப்ளான்! -
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. கஜனாவை நிரப்ப ரெடியான விஜய்! வேற லெவல் ப்ளானா இருக்கே ப்ரோ! -
நீங்க நல்லா இருக்கோனும்..பார்ட்டி ஃபண்டை கட் செய்த விஜய்! குஷியில் வீடுகட்டுவோர்..ராடாரில் ஆபீசர்ஸ் -
வரவு எட்டணா..செலவு பத்தணா! ஒரு மணி நேரத்துக்கு 7 கோடி வட்டி! விஜய்க்கு இது தான் மிகப் பெரிய தலைவலியே -
முதல்வர் விஜய் பிறந்த நாள்.. வண்டலூர் பூங்காவில் ஜூன் 21, 22-ல் அனுமதி இலவசம்.. அமைச்சர் விளக்கம் -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
விஜய் அதிரடி உத்தரவு.. சென்னை அடையாளம் தெரியாத அளவுக்கு மாறப்போகுது.. 3வது மாஸ்டர் பிளான்! -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
சொன்னதை செய்த விஜய்.. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய தமிழ்நாடு சட்டசபை.. 2வதாக தேசிய கீதம் -
எந்தவித ஊழல் மற்றும் கமிஷன் குற்றச்சாட்டு இல்லை... முதல்வர் விஜய்யை பாராட்டிய வைகோ












Click it and Unblock the Notifications