டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை நாளை மறுநாள் சந்திக்கும் எல்.முருகன், அண்ணாமலை!
திருச்சி: டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை நாளை மறுநாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் நாளை மறுநாள் சந்திக்க உள்ளனர். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதனைத் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: மத்திய அரசு எங்கேயும் குலக் கல்வித் திட்டத்தை ஊக்கப்படுத்தவில்லை. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான விஸ்வகர்மா சமூகத்தினர் பதிவு செய்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக அளவில் முத்ரா கடனுதவி பெற்றவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான்.

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைப் பொறுத்தவரையில் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளோம். மக்களின் மனது புண்படும்படி மத்திய அரசு எப்போதும் நடந்து கொள்ளாது. அப்பகுதியின் பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் ஒருமித்த கருத்துடன் என்னிடம் டங்ஸ்டன் சுரங்கம் பற்றி பேசினார்கள். அழகர் கோவில் அருகே உள்ளது; பாரம்பரியமிக்க தலங்கள் அங்கே உள்ளன. மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியிடம் தொலைபேசியிலும் பேசி நிலைமையை விளக்கி இருக்கிறோம்.
இது தொடர்பாக டெல்லியில் வரும் 12-ந் தேதி அதிகாலை வந்து சந்திக்க நேரம் ஒதுக்கி உள்ளார் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி. நானும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை வரும் 12-ந் தேதி சந்திக்க உள்ளோம். அன்று நல்ல முடிவோடு தமிழ்நாட்டுக்கு திரும்பி வருவோம். விவசாயிகள் குரலுக்கு நிச்சயம் மத்திய அரசு செவிசாய்க்கும்.
ஆனால் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் சட்டசபையில் பெரிய நாடகத்தையே நடத்தி இருக்கிறார். இத்தனைக்கும் நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறோம் எனவும் தெரியவும்; மத்திய அமைச்சரிடம் பேசிவிட்டோம்; நிச்சயம் சுரங்க ஒப்பந்தம் ரத்தாகும் எனவும் முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும்; ஆனாலும் மிகப் பெரிய நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிரச்சனைகளுக்காக ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வர் நினைத்தால் டாஸ்மாக் மதுபான கடைகளை திறந்து வைத்திருப்பதற்காக அவர் பதவி விலக வேண்டும். தமிழ்நாட்டு பெண்களின் தாலி அறுக்கக் கூடிய, தீங்கு விளைவிக்கக் கூடியது டாஸ்மாக்தான். ஆகையால் முதல்வர் ஸ்டாலின் ஏன் பதவி விலகாமல் இருக்கிறார்? இதற்கு முதல்வர் பதவி விலகினால்தான் அவர் பேச்சுக்கு மரியாதையும் இருக்கும்.
திமுகவின் ஊழல்கள் தொடர்பாக திமுக பைல்ஸ் என்ற பெயரில் 2 ஆவணங்களை வெளியிட்டுள்ளோம். தேர்தல் நேரத்தில் திமுக பைல்ஸ் 3 வெளியிடப்படும்.
பாஜகவுடன் விடுதலைச் சிறுத்தைகளை ஒப்பிடக் கூடாது. விடுதலைச் சிறுத்தைகளுடன் ஒப்பிடும் அளவுக்கு பாஜக கீழானதும் அல்ல. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
-
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications