சனாதன படையெடுப்பை முறியடிக்க தான் திமுகவுடன் கூட்டணி... திருச்சியில் முழங்கிய வைகோ
திருச்சி: திராவிடர் இயக்கத்தை பாதுகாக்கவே திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது சனாதன படையெடுப்பு உள்ளது என்று நான் அறிவித்திருக்கிறேன்.
திமுகவுக்கு பக்க பலமாக இருப்போம். திராவிடர் இயக்கத்தை பாதுகாக்கவே திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். கடந்த ஆண்டே இதை நான் அறிவித்து இருக்கிறேன்.

அறைகூவல்
தற்போதைய நிலையில் திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டும். தன்மானத்துக்கு விடப்பட்டுள்ள அறை கூவல். நான் திமுக கூட்டணியில் தான் ஏற்கனவே உறுதிப்படுத்தி இருக்கிறேன்.

எங்கேயிருக்கிறார் முகிலன்?
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திலே ஈடுபட்ட முகிலன் மாயமானது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. ஸ்டெர்லைட் போராளியான அவர் போராட்டக்காரர்களை போலீசார் சுட்டுக் கொன்றிருக்கின்றனர் என்ற உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

முகிலனுக்கு ஆபத்து
முகிலன் யாரால் கடத்தப்பட்டார்? அவரது உயிருக்கு ஆபத்து என்றால் இந்த அரசு காரணம் என்று குற்றம் சாட்டுகின்றேன். அவர் அரசு உடனடியாக மறைத்து வைத்திருந்தால் மக்கள் மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

தமிழக அரசு காரணம்
முகிலன் காணாமல் போனதற்கு போலீசும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுமே காரணம். இது என்னுடைய பகிரங்கமான குற்றம்சாட்டு என்று வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications