திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து 2ஆம் நாள் - முத்து சாய் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நம்பெருமாள் தங்கக் கிளி, முத்து சாய் கொண்டையுடன் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.

Google Oneindia Tamil News

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து உற்சவத்தின் 2 ஆம் திருநாளன்று காலை நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் முத்து சாய் கொண்டை, வைர அபயஹஸ்தம், தங்க கிளி,பவளமாலை,பஞ்சாயுத பதக்கம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

 Vaikunda Ekadasi 2020: Srirangam Ranganathar Temple pagal pathu 2nd day Namperumal alangaram

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திங்கட்கிழமை தொடங்கியது. 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினசரியும் நம்பெருமாள் அலங்காரமாக வந்து அர்ஜூனா மண்டபத்தில் எழுந்தருளுவார்.

 Vaikunda Ekadasi 2020: Srirangam Ranganathar Temple pagal pathu 2nd day Namperumal alangaram

பகல்பத்து விழாவின் முதல் நாளான்று நம்பெருமாள் நீள்முடி கிரீடம், ரத்தின அபயகஸ்தம் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
பகல் பத்து விழாவின் 2ஆம் நாளான இன்று நம்பெருமாள் காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து தங்கக் கிளி, முத்து சாய் கொண்டை, வைர அபயஹஸ்தம், பவளமாலை, பஞ்சாயுத பதக்கம் அலங்காரத்தில் புறப்பட்டு 7.00 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார்.

 Vaikunda Ekadasi 2020: Srirangam Ranganathar Temple pagal pathu 2nd day Namperumal alangaram

ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா முழக்கத்துடன் நம்பெருமாளை வழிப்பட்டனர். இதனையடுத்து இரவு 9 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுனா மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

English summary
Vaikunda Ekadasi festival at the Srirangam Ranganathar Temple, Namperumal awoke on the second day of the festival in the Muthu Sai kondai and served the devotees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X