ஶ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: பகல் பத்து உற்சவம்- அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஶ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி (அரங்கநாத சுவாமி) திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வுகளில் பகல் பத்து உற்சவம் இன்று காலை தொடங்கியது. இன்று முதல் அர்ஜூன மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.

ஶ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வுகள் திருநெடுந்தாண்டகத்துடன் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கின. அப்போது நாதமுனி வகையறா அரையர் குடும்பத்தினர் திருமங்கை ஆழ்வார் பாடல்கள் படி உரிய மரியாதைகளுடன் அரங்கநாதரின் மூலஸ்தானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

vaikunta ekadasi 2025 spirituality srirangam 2025

இதனையடுத்து இன்று முதல் பகல் பத்து உற்சவம் தொடங்கியது. பகல் பத்தின் முதல் நாள் உற்சவம்தான் திருமொழி திருநாள். இன்று காலை 7.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு காலை 8.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைந்தார். பின்னர் நம்பெருமாள் முன்பாக அரையர்கள், நாலாயிர திவ்யபிரபந்தம் பாடல்களைப் பாடினர். இன்று இரவு 7.30 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைவார்.

இன்று முதல் 20 நாட்களுக்கு அரங்கநாதப் பெருமாள் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். பகல் பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரங்களில் அர்ஜூன மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருள்வார். பகல் பத்தின் 10-வது நாளில் மோகினி அலங்கார திருக்கோலத்தில் காட்சி தருவார் நம்பெருமாள்.

இதனையடுத்து ராப் பத்து உற்சவம் ஜனவரி 10-ந் தேதி தொடங்கும். அன்றுதான் வைகுண்ட ஏகாதசி. அன்று அதிகாலை 4.15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், அதிகாலை 5.15 மணிக்கு சொர்க்கவாசலில் (பரமபதவாசல்) எழுந்தருள்வார். இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சொர்க்கவாசலானது ஜனவரி 11-ந் தேதி முதல் ஜனவரி 15-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்து இருக்கும். ஜனவரி 16-ந் தேதி மாலை 4 மணி முதல் இரவு 9 மணி சொர்க்கவாசல் திறந்து இருக்கும்.

சொர்க்கவாசல் திறப்பு முதல் ராப்பத்து நிகழ்வுகள் அதாவது திருவாய்மொழி திருநாள் தொடங்கும். இந்த கால கட்டத்தில் திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருள்வார்.

ஶ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி- சொர்க்கவாசல் திறப்பு காலத்தில் பல லட்சம் பக்தர்கள் நாடு முழுவதும் இருந்தும் வருகை தந்து பெருமாளை வழிபடுவர். இதனால் பக்தர்களுக்கான வசதிகளுடன் முழு வீச்சில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+