வருண்குமார் ஐபிஎஸ் வழக்கு! திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்! வழக்கு 29-க்கு ஒத்திவைப்பு
திருச்சி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்றைய தினம் சீமான் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் வருண்குமார் வழக்கில் சீமான் நேற்றைய தினம் மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் சீமான் தரப்பு வழக்கறிஞர், சீமான் நாளை (இன்று ஏப்.8) ஆஜராவார் என தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகிறார். இந்த வழக்கு என்ன என்பதை பார்க்கலாம். நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகனை கைது செய்து சிறையில் அடைத்து வருண்குமார் திட்டமிட்டு பழிவாங்குவதாக சீமான் புகார் கூறியிருந்தார்.
இந்த நிலையில் வருண்குமாரையும் அவருடைய மனைவியும் புதுக்கோட்டை எஸ்பியுமான வந்திதா பாண்டேவையும் எக்ஸ் வலைதள பக்கத்தில் இருந்து ஆபாசமாக விமர்சித்து சீமானின் ஆதரவாளர்கள் அவதூறு பரப்பியதாக வருண்குமார் புகார் அளித்திருந்தார்.
இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சீமான் முயற்சிப்பதாகவும் திருச்சி 4ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் டிஐஜி வருண்குமார் வழக்கு தொடுத்திருந்தார். மேலும் நஷ்ட ஈடு கோரியிருந்த வழக்கின் விசாரணைக்கு வருண்குமார் நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராகி வாக்குமூலமும் அளித்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் சீமானுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் இதுவரை சீமான் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாலை 5 மணிக்குள் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் சீமான் தரப்பு வழக்கறிஞர் அவர் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு நீதிபதி, சீமான் இன்று காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டிருந்தனர். அதன்படி சீமான் இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி, இந்த வழக்கை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தார்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications