பொங்கி வரும் காவிரி! ஆர்ப்பரிக்கும் ஆற்றின் நீரோசை! திருச்சிக்கு ஓடோடி வந்த சந்தீப் சக்சேனா!
திருச்சி: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து பொங்கி வரும் நிலையில், திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா.
மேலும் இந்த ஆய்வின் போது, நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டறிந்தார்.
அமைச்சர் கே.என்.நேருவும் இந்த ஆய்வின் போது அங்கிருந்த உரிய ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.

காவிரியில் வெள்ளம்
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால், அங்கிருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கொம்பில் ஆய்வு
குறிப்பாக காவிரி ஆற்றில் முக்கொம்புக்கு நேற்று மாலை நிலவரப்படி 1½ லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அந்த தண்ணீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஆறுகளில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என்றும் முக்கொம்பு மற்றும் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதை வழியாக யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

24 மணி நேரம்
மேலும் காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையும் இணைந்து 24 மணி நேரமும் காவிரி கரையோரங்களில் பாதுகாப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்த நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடுகள் பற்றி நேரில் ஆய்வு செய்தார். அமைச்சர் துரைமுருகனின் அறிவுறுத்தல் படி அவர் திருச்சி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Recommended Video

கண்காணிப்பு தீவிரம்
ஆய்வின் போது செய்தியாளர்களை சந்தித்த சந்தீப் சக்சேனா, மேட்டூரில் இருந்து 2.15 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டு இருப்பதாகவும் அது முக்கொம்பு மேலணையை வந்தடைய 8 முதல் 9 மணி நேரம் ஆகும் எனவும் கூறினார். தொடர்ந்து 24 மணி நேரமும் காவிரி கரையோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த பணிகளை மாவட்ட கலெக்டர் கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications