திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கழிப்பறைக்குள் சென்ற ஊழியர்கள்.. கதவை திறந்து பார்த்தா! அம்மாடி! திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் உள்ள கழிவறையை தூய்மைப்பணியாளர் சுத்தம் செய்ய சென்ற போது அங்கு நடந்த சம்பவம் ஒன்று விமான நிலைய அதிகாரிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்று திருச்சி விமான நிலையம் ஆகும். சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை, அபுதாபி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், உள்நாட்டில் இருந்தும் இரவு, பகலாக திருச்சி விமான நிலையத்திற்கு விமானங்கள இயக்கப்பட்டு வருகிறது.

தென் மாவட்ட மக்கள் பலர் வெளிநாடு செல்ல திருச்சி விமான நிலையம் வருவதுண்டு.

குப்பையிலும் காசு சம்பாதிக்கலாம்! மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு! திருச்சி மேயரின் பலே திட்டம்! குப்பையிலும் காசு சம்பாதிக்கலாம்! மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு! திருச்சி மேயரின் பலே திட்டம்!

திருச்சி விமான நிலையம்

திருச்சி விமான நிலையம்

மக்கள் அதிகம் பயன்படுத்தும் விமான நிலையங்களில் ஒன்றாக திருச்சி விமானம் நிலையம் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு துபாய், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து 4 விமானங்கள் திருச்சி வந்து.. இன்று காலை மீண்டும் புறப்பட்டது. அதேபோல் இன்று காலை இலங்கையில இருந்து ஒரு விமானமும் பயணிகளுடன் திருச்சியில் தரையிறங்கியது.

தங்கம்

தங்கம்

அதே சமயம் திருச்சி விமான நிலையத்தில் அவ்வப்போது தங்கம், போதை பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்கள் வருவதால் இங்கே கடுமையாக சோதனைகள் செய்யப்படுவது வழக்கம். செக் அவுட் செய்யும் நபர்களை விமான நிலைய அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்வது வழக்கம். இங்கு அதிகம் தங்கம் கடத்தப்படுவதாக அவ்வப்போது புகார்கள் வைக்கப்படுவது வழக்கம்.

கடத்தல்

கடத்தல்

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் உள்ள கழிவறையை தூய்மைப்பணியாளர் சுத்தம் செய்ய சென்ற போது, அங்கே பிளாஸ்டிக் கவர் ஒன்று கிடந்ததை கண்டுள்ளார். வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறையினரிடம் இது குறித்து அவர் தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த சுங்கத்துறையினர் அந்த பிளாஸ்டிக் கவரை கைப்பற்றி அதனை ஸ்கேனர் மிஷின் மூலம் சோதனையிட்டனர். பல அதிகாரிகள் அங்கு மொத்தமாக குவிந்து சோதனை செய்தனர்.

சிசிடிவி

சிசிடிவி

அப்பொழுது அந்த கவருக்குள் ரூ.60 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ தங்கம் இருந்தது. பெரிய தங்க கட்டிகள் அதன் உள்ளே இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கழிவறையில் விட்டு சென்ற நபர் யார், அதனை எடுத்து வெளியில் கொடுக்க இருந்த நபர் யார் என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மர்ம நபர் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
What did the cleaners find in the Trichy airport today may blow your mind. திருச்சி விமான நிலையத்தில் உள்ள கழிவறையை தூய்மைப்பணியாளர் சுத்தம் செய்ய சென்ற போது அங்கு நடந்த சம்பவம் ஒன்று விமான நிலைய அதிகாரிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X