கள்ளக்காதலில் விழுந்த திருச்சி டீச்சர் கீர்த்தனா.. ஊருக்கே தெரிய வந்த உண்மை.. அடுத்து நடந்த சோகம்
திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூரில் கள்ளக்காதல் ஜோடி தோட்டத்தின் மோட்டார் அறை கொட்டகையில் இருந்த காட்சியை பார்த்து உள்ளூர் மக்கள் ஆடிப்போனார்கள், இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்காதல்: திருமணத்தை மீறிய உறவு என்பது ஆண் பெண் இருவருக்குமே ஏதோ ஒரு காரணத்தால் ஏற்படுகிறது. கணவர் அல்லது மனைவி அதீதமாக அவமானப்படுத்தும் போது, அதே பாசம் மற்ற துணையிடம் கிடைக்கும் போது, வழிதவறி கள்ளக்காதலில் விழுவது நடக்கிறது. பெரும்பாலான கள்ளக்காதலின் துவக்கப்புள்ளி ஆறுதல் கூறுவதில் ஆரம்பிக்கிறது. ஒருவர் பிரச்சனையில் இருக்கும் போது ஆறுதல் கூறுவதாக ஆரம்பிக்கும் போது, அது நட்பாகி எல்லை மீறும் நிலை ஏற்படுகிறது. அதேநேரம் வசதி வாய்ப்புக்காகவும், உறவில் திருப்தி இல்லாத காரணத்தாலும் இதுபோன்ற ஈர்ப்புகள் ஏற்படுவது நடப்பதாக சொல்கிறார்கள்.

இந்த திருமணத்தை மீறி உறவை கைவிடவும் முடியாமல், ஏற்கனவே உள்ள உறவுடன் உண்மையான காதலை வெளிப்படுத்த முடியாமல், ரகசியமாக தொடர்வதால் கள்ளக்காதல் தொடர்கிறது. இது உளவியல் ரீதியாக பல்வேறு சிக்கல்களை இருவருக்குமே ஏற்படுத்துகிறது. கள்ளக்காதல்கள் ரகசியமாக இருக்கும் வரை இருவருமே தங்கள் உறவுகளிடம் ஏமாற்றி வாழ்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் உண்மை தெரியும் போது, தனது கணவன் அல்லது மனைவியை கொன்றுவிட முடிவு செய்கிறார்கள். சிலர் தன்னை தானே அழித்துக் கொள்ளவும் தயங்குவது இல்லை.. அவமானத்தில் ஜோடியாக உயிரையும் விட்டுவிடவும் துணிகிறார்கள்.அப்படித் தான் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 29 வயதாகும் கிருஷ்ணமூர்த்தி, ஐ டி ஐ படித்துள்ளார். இவர் விவசாய வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. இதேபோல் காட்டுப்புத்தூர் அருகே உள்ள சீத்தம்பட்டி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரின் மனைவி கீர்த்தனா (23). இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 6 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் ஒரு மகள் உள்ளார். பி.ஏ பட்டதாரியான கீர்த்தனா தவுட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் கடந்த சில மாதங்களாக ஆசிரியையாக வேலை செய்து வந்தார்,
இந்த நிலையில் கீர்த்தனா பள்ளிக்கு சென்று வரும்போது கிருஷ்ணமூர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டதாம். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிவிட்டதாம். இருவரும் வீட்டிற்கு தெரியாமல் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனிடையே இந்த கள்ளக்காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் ஒரு கட்டத்தில் தெரியவந்தது.
இதனால் அவமானம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியும், கீர்த்தனாவும் அப்பகுதியில் உள்ள தோட்டத்தின் மோட்டார் அறை கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார், நேரில் வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications