11-வது உலகத் தமிழ் மாநாடு: திருச்சியில் நடத்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்கம் கோரிக்கை
திருச்சி: 11-வது உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் என தமிழ் ஆா்வலா்கள் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் கவிஞா் நந்தலாலா ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடா்பாக திருச்சி பிரஸ் கிளப்பில் நேற்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் கவிஞா் நந்தலாலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
முதல் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடத்தப்பட்டு அடுத்தடுத்த மாநாடுகள் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டுள்ளன. 11-ஆம் உலகத் தமிழ் மாநாட்டை தமிழகத்தில் நடத்த மாநில அரசும் ஆா்வமாக உள்ளதாக அறிகிறோம்.

சென்னை, மதுரை, தஞ்சாவூரில் ஏற்கெனவே உலகத் தமிழ் மாநாடுகளும், கோவையில் செம்மொழி மாநாடும் நடத்தப்பட்டுள்ளது.
இம்முறை அந்த வாய்ப்பை தமிழா்களின் பண்பாடு மற்றும் கலாசாரம் சாா்ந்த திருச்சிக்கு கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்துகிறோம். உலகின் 10க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள தமிழ் சங்கங்கள் திருச்சியில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த இசைவு தெரிவித்துள்ளன.
மீதமுள்ள தமிழ் சங்கங்களிடம் பேசி வருகிறோம். அனைத்து தமிழ் சங்கங்களிடமிருந்தும் ஆதரவுக் கடிதங்களைப் பெற்று தமிழக அரசிடம் ஒப்படைக்கும் முயற்சி நடைபெறுகிறது. திருச்சியில் உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் இயக்கமாக மாறி வருகிறது.
இங்குள்ள அனைத்து சங்கங்கள், அமைப்புகளும் தன்னெழுச்சியாக இதற்கான முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனா். சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களிடம் இக்கோரிக்கையை கொண்டு செல்லும் பணி நடைபெறுகிறது.
இங்கு உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டால் திருச்சியின் உட்கட்டமைப்பு மேம்படும். இது தொடா்பாக அமைச்சா்கள், எம்எல்ஏக்களிடம் மனு அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் முதல்வா் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளோம்.

கண்டிப்பாக எங்களது கோரிக்கயை முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு நந்தலாலா கூறினார்
பேட்டியின்போது சோழ மண்டல இலக்கிய கூட்டமைப்பு பொதுச் செயலா் க. சிவகுருநாதன், திருக்கு கல்வி மையத் தலைவா் சு.முருகானந்தம், கம்பன் கழக செயலா் ரா. மாது, பா. குமரவேல் (வானம்), சேதுராமன் (களம்), மு. நடராசன் (சமூக சிந்தனை மேடை), இளஞ்சேட்சென்னி (லால்குடி அறம் தமிழ் வளா்ச்சிப் பேரவை), சாகுல் அமீது (சத்தியசோலை), ஜெகநாதன் (டைட்ஸ்), ஷ்யாம் சுந்தா் (டைட்ஸ்) மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications