For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலககோப்பை டி20: பாகிஸ்தான்-ஜிம்பாப்வே ரசிகர்கள் திடீர் மோதல்.. காரணம் மிஸ்டர் பீன்.. ஒரே காமெடி

Google Oneindia Tamil News

பெர்த்: உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் தான் இருநாட்டு வீரர்களுக்கும் மிஸ்டர் பீன் பெயரை கூறி மோதிக்கொண்ட சம்பவம் ஒரே சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. முதலில் தகுதி சுற்று போட்டிகள் நடந்த நிலையில் தற்போது சூப்பர் 12 சுற்று நடந்து வருகிறது.

இதில் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

மாத ஊதியம் ரூ.63,000.. ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பம் செய்ய நல்ல வாய்ப்பு.. முழுவிபரம்மாத ஊதியம் ரூ.63,000.. ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பம் செய்ய நல்ல வாய்ப்பு.. முழுவிபரம்

பாகிஸ்தான்-ஜிம்பாப்வே மோதல்

பாகிஸ்தான்-ஜிம்பாப்வே மோதல்

குரூப் பி பிரிவில் இன்று 3 போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா, வங்கதேச அணிகள் மோதின. இதில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 2வதாக இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் இந்தியா வென்றது. 3வது போட்டியாக பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்கி உள்ளது.

பாகிஸ்தான்-ஜிம்பாப்வே ரசிகர்கள் மோதல்

பாகிஸ்தான்-ஜிம்பாப்வே ரசிகர்கள் மோதல்

இந்நிலையில் தான் போட்டிக்கு முன்பாகவே பாகிஸ்தான், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் மோதி கொண்ட சம்பவம் நடந்துள்ளது. சில வேளைகளில் கிரிக்கெட் போட்டியின்போது இருநாட்டு வீரர்கள் அடித்து கொண்டு பெரிய சண்டையில் ஈடுபட்டது உண்டும். ஆனால் இங்கு அப்படி எதுவும் நடைபெறவில்லை. மாறாக இருநாட்டு வீரர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதல் கிரிக்கெட்டை சார்ந்து இருந்தால் பரவாயில்லை. ஆனால் இருநாட்டு ரசிகர்களும் மோதிக்கொண்டதன் பின்னணியில் வேடிக்கையான சம்பவம் ஒன்று உள்ளது. அதன் விபரம் வருமாறு:

போட்டோ பதிவிட்ட பாகிஸ்தான்

போட்டோ பதிவிட்ட பாகிஸ்தான்

பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையேயான போட்டியையொட்டி பாகிஸ்தான் அணி வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதுதொடர்பான போட்டோக்களை நேற்று முன்தினம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இதனை பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும் நிச்சயம் ஜிம்பாப்வே அணியை வீழ்த்த வேண்டும் என கூறி வந்தனர்.

குறுக்கே வந்த ஜிம்பாப்வே ரசிகர்

குறுக்கே வந்த ஜிம்பாப்வே ரசிகர்

இந்த வேளையில் நேற்று தான் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் நுஜி சாசுரா குறுக்கே நுழைந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்டுக்கு கமெண்ட் செய்தார். அதில், ‛‛ஜிம்பாப்வேயை சேர்ந்த நாங்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். மிஸ்டர் பீன் ரோவனுக்கு பதில் போலியான பாகிஸ்தான் பீனை எங்களுக்கு வழங்குவிட்டீர்கள். இந்த மேட்டரை நாளை முடித்து கொள்ள உள்ளோம். மழை வந்து உங்களை காப்பாற்ற வேண்டும்'' என கூறியிருந்தார். இதன்மூலம் பாகிஸ்தானை ஜிம்பாப்வே நிச்சயம் வீழ்த்தும். மழை வந்தால் மட்டுமே பாகிஸ்தான் தப்பிக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

இது பலருக்கும் புரிந்த நிலையில் கிரிக்கெட் சார்ந்த பதிவில் ஏன் மிஸ்டர் பீன் பாத்திரத்தை இழுக்கிறார் என பலருக்கும் புரியவில்லை. இதுபற்றி பாகிஸ்தான் ரசிகர்கள் நுஜி சாசுராவிடம் கேட்டனர். அதற்கு அவர் அடுத்தடுத்த பதிவுகளில் விளக்கி இருந்தார். அதில், ‛‛கடந்த 2016ல் ஜிம்பாப்வே ஹராரேவில் விவசாயம் சார்ந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் உண்மையான மிஸ்டர் பீன் ரோவன் அத்கின்சான் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசிப் முகமது எனும் போலி மிஸ்டர் பீன் பங்கேற்று பணத்தை பெற்று சென்றார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டது. ஆசிப் முகமது உண்மையான மிஸ்டர் பீன் ரோவன் அத்கின்சன் போன்று இருந்ததால் ஜிம்பாப்வே அவரை நம்பிவிட்டனர். இப்படி மோசடி செய்த பாகிஸ்தானை நாங்கள் இந்த போட்டியில் பழிதீர்ப்போம்'' எனக்கூறி போலியான மிஸ்டர் பீன் ஆசிப் முகமது போட்டோக்களை பகிர்ந்தார்.

டிரெண்ட்டான விவாதம்

டிரெண்ட்டான விவாதம்

சீரியஸாக தொடங்கிய இந்த விவாதம் இறுதியில் காமெடியானது. இருப்பினும் இந்த விஷயத்தை பாகிஸ்தான், ஜிம்பாப்வே ரசிகர்கள் விடவில்லை. தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் இருநாட்டு வீரர்களும் கருத்துகளை பதிவு செய்தனர். இதில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து வேடிக்கையான கருத்துகள் அதிகமாக இருந்தன. மேலும் இது டிரெண்ட்டானது.

ரசிகர்கள் கருத்து மோதல்

ரசிகர்கள் கருத்து மோதல்

மேலும் இந்த விவாதம் கருத்து மோதலாகவும் மாறியது. அதாவது பாகிஸ்தான் ரசிகர்கள், ‛‛முடிந்தால் எங்களை தோற்கடியுங்கள்'' எனக்கூற அதற்கு ஜிம்பாப்வே வீரர்கள் நிச்சயம் எங்கள் அணி திறமையாக விளையாடி பாகிஸ்தானை வீழ்த்தும் எனக்கூற விவாதம் தீவிரமானது. இது ஒருபுறம் இருக்க போலி மிஸ்டர் பீன் விவகாரம் தொடர்பக மீம்களும் இணையதளங்களில் வெளியாகி உள்ளன. அதில் மீம் ஒன்று ‛‛இந்தியா-பாகிஸ்தான் போட்டி அரசியல் காரணங்களாக விறுவிறுப்பாகிறது. வங்கதேசம்-இலங்கை போட்டி நாகினி நடனத்துக்காக விறுவிறுப்பாகிறது. ஆனால் இங்கே பாகிஸ்தான்-ஜிம்பாப்வே போட்டி மிஸ்டர் பீனுக்காக விறுவிறுப்பாகிறது'' என அமைந்து இருந்தது.

English summary
Pakistan-Zimbabwe teams are playing today in World Cup T20 cricket match. In this case, the incident of fighting by calling Mr. Bean's name to the players of both countries has caused a lot of laughter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X