பைக்கில் பார்த்து போங்கப்பா.. எச்சரித்த 2 பேரை.. அரிவாளாலேயே வெட்டி சாய்த்த 7 பேர்!
இரட்டை கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்
Recommended Video
தூத்துக்குடி: பைக்கில் போனவர்களை பார்த்து ஒன்னும் பெரிசா சொல்லிவிடவில்லை.. "பார்த்து போங்கப்பா" என்றுதான் 2 பேர் சொன்னார்கள். இது ஒரு குத்தம்ன்னு 7 பேர் சேர்ந்து அவர்களை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளார்கள்!
தூத்துக்குடி சிவந்தாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். மெரைன் இன்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இந்திராகுமாரி, டெல்லியில் ஒரு பிரைவேட் காலேஜில் அசிஸ்டெண்ட் புரொபசர் ஆக உள்ளார்.

இவர்களுக்கு குழந்தை இல்லை. 2 மாசத்துக்கு முன்னாடி லீவில் தூத்துக்குடிக்கு முருகேசன் வந்துள்ளார். இவருடைய பள்ளி நண்பர் விவேக். எப்போது ஊருக்கு வந்தாலும் நண்பர்கள் பார்த்து பேசிக் கொள்வது வழக்கம்.
அப்படித்தான் சிவந்தாகுளம் பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து மணிகண்டன் என்பவர் நண்பருடன் பைக்கில் அந்த பக்கமாக வந்தார்.
அது ஒரு குறுகலான தெரு போல தெரிகிறது. அந்த தெருவுக்குள் அவ்வளவு ஸ்பீடாக வண்டியை ஓட்டி வரவும், "ஏம்ப்பா.. தெருவுக்குள்ள ஏன் இவ்வளவு வேகமாக போறீங்க.. சின்ன பிள்ளைங்க குறுக்கே வந்தா என்ன ஆகறது? பார்த்து போங்கப்பா" என்று முருகேசன் சொல்லி உள்ளார்.
இதுதான் பிரச்சனை.. பைக்கில் இருந்து இறங்கி வந்த 2 பேரும் இதுஒரு விஷயம் என்று எடுத்து கொண்டு, முருகேசனிடம் சண்டைக்கு வந்துவிட்டனர். இது தகறாக மாறியது.. மணிகண்டன் முருகேசனை தாக்கிவிட்டார். அப்பவும் விடாத மணிகண்டன் போனை போட்டு நண்பர்களை வரவழைத்தார். உடனே 3 பைக்கில் ஏழு பேர் அரிவாளுடன் வந்துவிட்டனர்.
என்ன ஏதென்றுகூட விசாரிக்கவில்லை.. முருகேசனை அரிவாளால் போட்டு தள்ளியது.. தடுக்க முயன்ற நண்பர் விவேக்கையும் வெட்டி சாய்த்து தப்பியது கும்பல். நண்பர்கள் 2 பேருமே அங்கேயே சுருண்டு விழுந்து பலியானார்கள். இப்போதைக்கு இந்த இரட்டை கொலை சம்பந்தமாக 2பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்!
-
தோசைக்கல்லை எடுத்து வந்த மனைவி.. அடுத்த நொடியே வாயடைத்து போன வடமதுரை.. திடுக் திண்டுக்கல் -
"நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர்..!" கண்ணீர் மல்க பேசிய நடிகை தீபாவின் அப்பா... நேரில் ஆறுதல் கூறிய கீதா ஜீவன் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications