வீட்டுக் கடன் வாங்கிய தூத்துக்குடி கல்பனா குடும்பம்.. காப்பீடு செய்ததால் கடனும் காலி, கொட்டிய காசு
தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கியில் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கி உள்ளார். கடன் வாங்கும் போது ஒரு லைப் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுப்பதற்காக பணம் செலுத்தி வந்துள்ளார். அவர் தவறிய நிலையில், அவர் செலுத்திய காப்பீடு தொகைப்படி வீட்டு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். காப்பீடு உள்பட ஒட்டுமொத்தமாக 25.35 லட்சம் பணத்தை பொதுத்துறை வங்கி திரும்பித்தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீட்டுக்கடன், தனிநபர் கடன் வாங்கும் பலர் காப்பீடு செய்கிறார்கள். ஏன் வங்கிகளே காப்பீடு செய்வதை கட்டாயமாக்கி உள்ளன. ஒவ்வொரு மாதமும் காப்பீடுக்காக குறிப்பிட்ட தொகையை சேர்த்தே எடுக்கின்றன. கொரோனா காலத்திற்கு பிறகு யாரும் வாழ்க்கை நிச்சயம் இல்லை என்பதை புரிந்து கொண்ட வங்கிகள், கடன் வாங்குவோர் காப்பீடு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளன.

இப்போது காப்பீடு செய்யாதவர்களை பார்ப்பதே அரிது என்பதாகிவிட்டது. வீட்டுக்கடன் வாங்குவோர் கண்டிப்பாக காப்பீடு செய்து கொள்வது நல்லது. ஏதாவது ஒரு சூழலில் வாழ்க்கையில் தவறிப்போனால், வீட்டினை உறவுகளுக்கு பத்திரமாக ஒப்படைக்க காப்பீடு அவசியம் ஆகும்.
ஆனால் சில நேரங்களில் காப்பீடு நிறுவனங்களும் சரி, வங்கிகளும் சரி, காப்பீட்டை ஏற்றுக்கொண்டு கடனை தள்ளுபடி செய்வது இல்லை.. அவர்களை கடனை கட்ட சொல்லி வற்புறுத்துவது நடக்கிறது. இதனால் கடனை கட்டும் அவர்கள், ஏமாற்றத்தை சந்திக்கிறார்கள்.. அப்படிப்பட்ட சூழலில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது மிக எளிது. அவர்களுக்கு தேவையான நீதியும், நிதியும் விரைவாகவே கிடைக்கும். அந்த வகையில் தான் தூத்துக்குடி சம்பவம் நடந்துள்ளது. காப்பீட்டு தொகையை வழங்க மறுத்த பொதுத்துறை வங்கி, தூத்துக்குடி பெண்ணுக்கு ரூ.25.35 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.
தூத்துக்குடியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கியில் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியிருக்கிறார். கடன் வாங்கும் போது ஒரு லைப் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுப்பதற்காக பணம் செலுத்தி வந்திருக்கிறார். அதன் பின்னர் உடல் நலம் சரியில்லாமல் அருணாச்சலம் இறந்து விட்டார். இதற்கான இழப்பீட்டு தொகையைத் தருவதோடு, கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவரது மனைவி கல்பனா பொதுத்துறை வங்கியிடம் கேட்டிருக்கிறார்.
கன்னியாகுமரி கடல் அலையில் சிக்கி மீண்ட கல்லூரி மாணவர்.. இரண்டாவது முறையாக வந்த எமன்.. இப்படியுமா?
ஆனால், வங்கி சரியான காரணங்களை கூறாமல் இவற்றைத் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கல்பனா தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் புகார்தாரரின் கடன் நிலுவைத் தொகைகளை வங்கி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
காப்பீட்டு தொகையான ரூ.25 லட்சம், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.25 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை இரண்டு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அந்த தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications