தாயும், மகளும் ஒரே நபருடன் கள்ள காதல்! தட்டிக்கேட்ட குடும்ப தலைவன் கொன்று எரிப்பு.. தூத்துக்குடியில்
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே தாயும் மகளும் சேர்ந்த தந்தைக்குச் செய்த கொடூர காரியம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்துள்ள கோவில்பட்டி அச்சங்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் தீ எரிந்து கொண்டு இருப்பதைச் சிலர் பார்த்து உள்ளனர்.
அவர்கள் அருகே சென்று பார்த்த போது தான் அங்கு ஆண் சடலம் ஒன்று எரிந்து கொண்டு இருப்பதைப் பார்த்து உள்ளனர். இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

எரிந்த உடல்
இது தொடர்பாகத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார், அந்த உடலை மீட்டு பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பசுவந்தனை போலீசார், விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் கோவில்பட்டி அருகே குருவிநத்தம் தெற்கு தெருவைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஞானசேகர் (42) என்பது தெரிய வந்தது.

விசாரணை
மீன் வியாபாரியான இவருக்கு சலைத்ராணி (38) என்ற மனைவியும் இரு மகள்களும் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து குருவிநத்தம் சென்ற போலீசார் ஞானசேகரின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்திய போது பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்து உள்ளது.

முக்கோண காதல்
அதாவது அதே ஊரைச் சேர்ந்தவர் கருப்பசாமி என்ற கார்த்திக். 24 வயதான இவர், அப்பகுதியில் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவர் ஞானசேகரரின் மூத்த மகளைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல கார்த்திக்கிற்கு பெண்ணின் தாயார் கார்த்திக் சலைத்ராணியுடனும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இது ஒரு கட்டத்தில் ஞானசேகருக்கு தெரிய வந்து உள்ளது.

பிளான்
இதனால் ஆத்திரமடைந்த ஞானசேகர் இதெல்லாம் தப்பு என்று மனைவியையும், மகளையும் கண்டித்துள்ளார். இது தொடர்பாக சலைத்ராணிக்கும், ஞானசேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. பின்னர் அங்கு வாசலிலேயே அவர் தூங்கிவிட்டார். அப்போது வீட்டிற்கு வந்த கார்த்திக், ஞானசேகரை கொலை செய்தால் மட்டுமே நிம்மதியாக இருக்க முடியும் எனக் கூறியதாகத் தெரிகிறது.

கொலை
இதையடுத்து தூங்கிக் கொண்டு இருந்த ஞானசேகர் முகத்தில் மிளகாய் போடி போட்டு, அவரது கழுத்தை நெரித்து உள்ளனர். பின்னர் தாயும் 15 வயதான மைனர் மகளும் இணைந்து ஞானசேகரை கம்பி, அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் ஞானசேகர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.. அதன் பின்னர் அவரது உடலைச் சாக்கில் மூட்டையாகக் கட்டியுள்ளனர். அதை அச்சங்குளம் காட்டுப்பகுதியில் கொண்டு வந்த பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து உள்ளனர்.

கைது
வீட்டைக் கழுவி விட்டு, ஆயுதங்களையும் நீர் ஊற்றிக் கழுவி உள்ளனர். மேலும், உடலை எரித்து வந்த உடன் குளித்து விட்டு ஆடைகளை மாற்றிவிட்டனர். முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியதில் சந்தேகம் அடைந்து போலீசார் நடத்திய விசாரணையில் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து கார்த்திக், சலைத்ராணி, அவரது மகள் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பரபரப்பு
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கொடூர கொலை விவகாரத்தில் வேறுயாரும் தொடர்பு உள்ளதாக என பசுவந்தனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயும் மகளும் சேர்ந்த அப்பாவைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
