’தளபதி’ பாட்டுல சொன்னார்.. இவர் செஞ்சுட்டாரே! வீட்டில் கஞ்சா.. தவெக நிர்வாகி ’சுறா’ பாஸ்கர் கைது!
தூத்துக்குடி: நடிகர் விஜய் தனது படங்களில் போதைப் பொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் காட்சிகள், வரிகள் இடம்பெறுவதாக சர்ச்சைகள் கிளம்பிய நிலையில், தற்போது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் தவெக நிர்வாகியான சுறா பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நாயகனாக உயர்ந்து தற்போது அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய்.

ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி தற்போது அரசியல் கட்சியாகவும் மாற்றி 2026 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க போகிறேன் என சூளுரைத்துள்ளார்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அதற்கு பிறகு ஒரு படத்தில் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து முழுவதும் விலகிவிடுவேன்.. அதற்குப் பிறகு அரசியல் கட்சி பணிகளை மட்டுமே கவனிப்பேன் என தெரிவித்திருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் கலக்கம் அடைந்து இருந்தாலும் அவரது கட்சியினர் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் தவெக நிர்வாகிகள் விஜய்க்கு சங்கடங்களை ஏற்படுத்தி வருவதும் தொடர்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து பின்னர் தவெக நிர்வாகியாக மாறிய பாஸ்கர் என்ற சுறா பாஸ்கர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தூத்துக்குடி இனிகோ நகரை சேர்ந்தவர் பாஸ்கர் என்ற சுறா பாஸ்கர்.
மீனவரான இவர் தவெக நிர்வாகியாக உள்ளார். தூத்துக்குடியில் பீச் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் ராஜ் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த சுமார் 1.25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். மேலும் இது தொடர்பாக பிளாரன்ஸ் மகன் பாஸ்கர் என்ற சுறா பாஸ்கரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுறா பாஸ்கரை கைது செய்த தகவல் வெளியான நிலையில் பலரும் தமிழக கஞ்சா கழகம் என ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் நா ரெடி தான் பாடலில் "ஏ பத்தாது பாட்டில் நா குடிக்க மற்றும் பொகையல அறுவடைக்கு தயாரான" என தொடங்கும் பாடல் வரிகள் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் உள்ளதாக புகார்கள் எழுந்தன. மேலும் தற்போது வெளியாக இருக்கும் கோ படத்தின் பாடலிலும் பாரில் மது குடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications