Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூரில் இப்படியா? சூரசம்ஹார நாளில் பக்தர்களுக்கு வேதனை! நகை, செல்போன், பைக்குகள் போச்சே

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 7 ம் தேதி சூரசம்ஹாரம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த வேளையில் பக்தர்களிடம் 15 சவரன் நகை, ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 4 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தமிழ் கடவுள் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இதில் இரண்டாம் படை வீடு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

thiruchendur soorasamharam theft

கோவில் அருகே உள்ள கடலில் பக்தர்கள் நீராடி முருகனை மனமுறுகி பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி , தை பூசம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த விழாக்காலங்களில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வார்கள். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா
கடந்த 2ம் தேதி தொடங்கியது. கடந்த 7 ம்தேதி சூரசம்ஹாரம் விழா நடந்தது. அதன்பிறகு 8 ம் தேதி முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.

இதில் கடந்த 7 ம் தேதி திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அப்போது கஜமுகத்துடன் சூரபத்மன் வதம் செய்யப்பட்டார். மீண்டும் சிங்கமுகத்துடன் வந்த சூரனை, ஜெயந்திநாதர் வதம் செய்தார். சூரபத்மன் நேரிடையாக தோன்றினான். அவனையும் வதம் செய்தார். இறுதியில், சூரபத்மனை வதம் செய்து மயிலாகவும், சேவலாகவும் முருகப்பெருமான் ஆட்கொண்டார்.

இந்நிலையில் தான் சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் பலரும் தங்களின் பொருட்களை திருடர்களிடம் இழந்துள்ளனர். அதாவது சூரசம்ஹாரத்தின்போது 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் போலீசாரையும் மீறி திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். அதன்படி 50 லட்சம் மதிப்பிலான 4 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள், 15 சவரன் நகைகள் திருடுப்போய் உள்ளன.

இந்த பொருட்களை இழந்த பக்தர்கள் அதுதொடர்பாக திருச்செந்தூர் போலீசில் புகாரளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து திருடர்களை அடையாளம் காணும் பணியை போலீசார் தொடங்கி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+