Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூட்டுப்பட்டா, தனிப்பட்டா.. விவசாயிகளுக்கு PM கிசான் பலன்! நில விவரங்கள் பதிவுக்கு ஆவணத்துடன் ரெடி?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தமிழக விவசாயிகள் தங்களுடைய கிராமங்களில் வேளாண் துறை வாயிலாக நடத்தப்படும் முகாம் மற்றும் இ சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று தங்களது விவரங்களை அளித்து பயன்பெறுவதற்கான அறிவிப்புகள் அந்தந்த மாவட்டங்களின் சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது.. அந்தவகையில், விவசாயிகள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி உடனடியாக இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்காக எண்ணற்ற சலுகைகளும் அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.. தமிழக அரசின் திட்டத்தின் அனைத்து பலன்களையும் விவசாயிகள் நேரடியாகவே பெற்று வருகிறார்கள்..

joint patta PM Kisan scheme thoothukudi

இந்த திட்டத்தை பெறுவதற்கு, தங்களது நில உடைமை விபரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது..

நில உடைமை திட்டம்

இதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்ப்பதற்காகவே, விவசாயிகள் நில உடைமை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. இதற்கு விவசாயிகள் பதிவு விவரங்களுடன் ஆதார் நம்பர், செல்போன் நம்பர் உள்ளிட்ட நில உடைமை விவரங்களை சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது நடைமுறையாகும்.

நடப்பாண்டில் பிரதமரின் பிஎம் கிசான் பயிர் காப்பீடு திட்டம் போன்ற அரசின் திட்டங்களில் பயன்களையும், பலன்களையும் எளிதாக பெறுவதற்கும், தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் தேவைப்படுகிறது.. இதற்காகத்தான், தமிழகத்தின் கலெக்டர்கள் பிரத்யேகமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உள்ளதாவது:

பிரதமரின் கௌரவ நிதி

விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பிரதமரின் பி.எம்.கிசான் கௌரவ நிதி உதவித் தொகை, மாநிலத்தில் சொட்டுநீர் பாசனக்கருவிகள், வேளாண் உபகரணங்கள், வேளாண் இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிதி பங்களிப்புடன் விவசாயிகளுக்கு வழங்கி ஊக்குவித்து வருகிறது.

மத்திய அரசு வழங்கும் பி.எம்.கிசான் கௌரவ நிதி உதவித் தொகை விவசாயி அல்லாதவருக்கு சென்றுவிடக் கூடாது என இணைய வழியில் மத்திய அரசு பி.எம்.கிசான் கௌரவ நிதி உதவித் தொகை விவசாயிகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் ஊக்கத் தொகை பெறும் 48,762 விவசாயிகளில், 37,211 பேர் மட்டுமே தற்போது வரை அடையாள அட்டை எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர்.

மீதமுள்ள 11,551 விவசாயிகள் உடனடியாக பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏனெனில் நில உடைமைகளை பதிவேற்றம் செய்யாத றும் தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் திட்டத்தில் அடுத்த தவணை நிதி நிறுத்தப்படும்.

பட்டா ஆவணங்கள்

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10,79,481 பட்டாக்களில் இதுவரை 75,156 பட்டாக்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 10,04,325 பட்டாக்களை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 10,04,325 பட்டாக்களை பதிவு செய்யும் பொருட்டு விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா அல்லது கூட்டுபட்டா, ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுடன், அரசு கள அலுவலர்களையோ அல்லது பொது சேவை மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேளாண்மை உழவர் நலத்துறை

வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் அதன் தொடர்புடைய அனைத்து துறைகளில் செயல்படுத்தப்படும் அரசு மானிய திட்டங்கள் அனைத்தும் இனிவரும் காலங்களில் விவசாயிகள் தங்கள் நில உடமைகளை பதிவு செய்து அடையாள எண் பெற்றால் மட்டுமே பயன்பெற முடியும்.

எனவே விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை உழவர்நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று தங்கள் நில உடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி உடனடியாக இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+