Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி ஆழ்கடலில் சிக்கிய 73 கிலோ ராட்சத சுறா மீன்.. மக்களை மலைக்க வைத்த ஏலத் தொகை.. ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இன்று காலை அரங்கேறிய ஒரு காட்சி, அங்கிருந்த மீனவர்களையும் வியாபாரிகளையும் ஒருசேர வியப்பில் ஆழ்த்தியது. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்தத் துறைமுகத்திற்கு, ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் சென்ற விசைப்படகு ஒன்று கரை திரும்பியபோது, அதில் ஒரு ராட்சத உருவம் தென்பட்டது. அது என்ன தெரியுமா?

பெரும்பாலும், தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும்போது, வித்தியாசமான மீன்கள் அவர்களது வலையில் சிக்குவது வழக்கமாகும்.. சிலசமயம் அரிய வகை மீன்கள் வலையில் சிக்கிவிடக்கூடும்.. சிலசமயம், மருத்துவ குணம் வாய்ந்த அரிய மீன்களும் வலையில் சிக்கிவிடக்கூடும்

Tuticorin Fish

திருக்கை மீன்கள்

இப்படி சிக்கும் மீன்களை கரைக்கு கொண்டு வரும் மீனவர்கள், ஏலம் போட்டு விற்பனை செய்வார்கள்.. சிலசமயம், கூடுதல் விலைக்கு பங்கு போட்டு விற்றுவிடுவார்கள்.

சமீபத்தில்கூட கடலூர் கடலுக்கு சென்ற மீனவர்கள் வழக்கம்போல் வலை வீசி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது அவர்கள் வீசிய வலையில் மிகப்பெரிய ஒரு திருக்கை மீன் சிக்கியது.. முதலில் அது சாதாரண பெரிய மீன் என நினைத்த மீனவர்கள், பின்னர் அதன் அளவு மற்றும் எடை பார்த்தபோது ஆச்சரியமடைந்தனர்..

ராட்சத திருக்கை மீன்

அந்த திருக்கை மீன் சுமார் 1 டன் எடை கொண்ட ராட்சதமாக இருந்தது.. கடலில் இப்படிப்பட்ட மிகப்பெரிய திருக்கை மீன் சிக்குவது மிகவும் அபூர்வமான சம்பவம் என மீனவர்கள் கூறினர்.. இதனால் அதை படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வரவே அவர்களுக்கு சற்று சிரமமாக இருந்ததாம்..

பின்னர் அந்த ராட்சத திருக்கை மீனை கடலூர் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.. அங்கு படகிலிருந்து இறக்க கிரேன் பயன்படுத்தப்பட்டது.. கிரேன் மூலம் மெதுவாக தூக்கி தரையில் இறக்கப்பட்ட அந்த பெரிய மீனை பார்க்க அப்பகுதி மக்கள் கூட்டமாக திரண்டனர்.. பலரும் ஆச்சரியத்துடன் அதன் அளவை பார்த்து போட்டோக்களை எடுத்தனர்..

தூத்துக்குடி சுறா மீன்

இப்போதும் தூத்துக்குடியில் ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.. மீனவர்கள் இன்று காலை கடலுக்கு திரும்பியபோது, சுமார் 73 கிலோ எடை கொண்ட ஒரு ராட்சத சுறா மீனை கையோடு கொண்டு வந்துள்ளார்கள்..

மீனவர்கள் ஆழ்கடலில் வலைவீசியபோது, வழக்கத்திற்கு மாறாக வலை மிகவும் கனமாக இருப்பதை உணர்ந்தனர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு அந்த வலையை இழுத்துப் பார்த்தபோது, அதனுள் இந்த ராட்சத சுறா சிக்கியிருந்தது தெரியவந்தது.

பிரம்மாண்ட உருவம்

கரைக்கு கொண்டு வரப்பட்ட இந்தச் சுறாவைக் காண்பதற்காகவே துறைமுகத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சக மீனவர்கள் கூடினர். அதன் நீளமும், தடிமனும் அங்கிருந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு சாதாரண சுறாவை காட்டிலும் இது மிகவும் வலிமையான தோற்றத்தைக் கொண்டிருந்ததால், இதனைப் படகிலிருந்து தரைக்கு இறக்குவதற்கே மீனவர்கள் பெரும் சிரமத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தின் ஏலக் கூடத்திற்கு இந்தச் சுறா கொண்டு வரப்பட்டபோது, வியாபாரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இவ்வளவு பெரிய மீனை வாங்குவதற்குப் பலரும் ஆர்வம் காட்டினர். ஏலக் கூடமே சத்தத்தால் நிறைந்திருக்க, சுறாவைப் பார்த்த மாத்திரத்திலேயே அதன் தரத்தையும் மதிப்பையும் உணர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு விலையை உயர்த்தினார்கள்..

73 கிலோ சுறா மீன் ஏலம்

இறுதியாக, நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்த 73 கிலோ எடை கொண்ட ராட்சத சுறா 16 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த விலை மீனவர்களுக்கு ஓரளவிற்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், அதன் பிரம்மாண்டத்திற்கு இன்னும் கொஞ்சம் அதிக விலை கிடைத்திருக்கலாம் என்ற கருத்தும் அங்கிருந்த சிலரிடம் நிலவியது.

இந்த வகை சுறா மீன்கள் உணவிற்காக மட்டுமின்றி, அவற்றின் உடல் உறுப்புகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மற்றும் பிற மருத்துவ காரணங்களுக்காகவும் அதிகத் தேவையைக் கொண்டவை. குறிப்பாக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதால், வியாபாரிகள் இதனை வாங்குவதில் அதிக முனைப்பு காட்டுகின்றனர்.

தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது இத்தகைய அரிய மற்றும் பெரிய வகை மீன்கள் சிக்கினாலும், 73 கிலோ எடையுள்ள சுறா ஏலம் விடப்பட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.. பிடிபட்ட சுறா உடனடியாக ஏலம் விடப்பட்டு, பதப்படுத்தப்பட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சோஷியல் மீடியாவில் இந்த ராட்சத சுறாவின் போட்டோக்கள் வேகமாகப் பரவி வருகின்றன...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+