தூத்துக்குடிக்கு விமான நிலையம் மட்டுமல்ல.. 3 ஆயிரம் ஏக்கரில் புதிய பிரம்மாண்டம்.. மத்திய அரசு அதிரடி
தூத்துக்குடி: பிரதமர் மோடி விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை கடந்த 3 தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். அதன் மூலம் இனி தூத்துக்குடியில் பெரிய ரக விமானம் வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கையும் பெரிய அளவில் உயரும். இந்த சூழலில் அடுத்த அதிரடியாக, தூத்துக்குடிக்கு 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கப்பல் கட்டுமான தளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடி விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை கடந்த 3 தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். ரூ.450 கோடி செலவில் உருவாக்கப்பட்டு இருக்கும் தூத்துக்குடி புதிய விமான முனையம், ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளை வரவேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

விமான நிலையம்
முன்னதாக ஆண்டுக்கு வெறும் 3 லட்சம் பயணிகளை மட்டும் கையாளும் திறன் கொண்டதாக தூத்துக்குடி விமான நிலையம் இருந்தது. இந்த புதிய முனையம் தொடங்கப்பட்ட பிறகு வர இருக்கும் காலத்தில் தேசத்தின் மேலும் பல வழிகள் வரை தூத்துக்குடி இணைப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இங்கு இருக்கும் வியாபாரத்துக்கும், தொழிலுக்கும் ஊக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் இனி தூத்துக்குடியில் பெரிய ரக விமானம் வந்து செல்லும் என்பது உறுதியாகி உள்ளது.
கப்பல் கட்டுமானம்
இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்தும் ஒரு மெகா திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கப்பல் கட்டுமான தொகுப்புகள் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதில் தமிழகத்தில் தூத்துக்குடி துறைமுகம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
3000 ஏக்கர் கட்டுமான தளம்
இந்த திட்டத்திற்காக தூத்துக்குடி துறைமுகம் அருகே 1,800 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் கூடுதலாக 1,200 ஏக்கர் இடம் அதில் இணைக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 3 ஆயிரம் ஏக்கரில் இந்த கப்பல் கட்டுமான தளம் அமைக்கப்பட உள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "தூத்துக்குடியை முக்கிய கப்பல் கட்டும் மையமாக உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் தூத்துக்குடி பசுமை எரிபொருள் தொழில்துறைக்கான முக்கிய மையமாகவும் உருவாக்கப்படுகிறது.
தூத்துக்குடிக்கு மணி மகுடம்
தூத்துக்குடியில் உருவாக்கப்படும் கப்பல் கட்டுமானத்தில் கப்பல்கள், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பசுமை எரிபொருள்கள் பயன்படும் வகையில் தயாரிக்கப்பட உள்ளது. இது தூத்துக்குடியின் மற்றொரு மணி மகுடமாக இருக்கும். ஏற்கனவே, 5 பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டங்கள் (40 லட்சம் டன் ஆண்டுக்கு) தூத்துக்குடியில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கு மட்டும் ரூ.2 லட்சம் கோடி முதலீடுகள் திட்டமிடப்பட்டிருக்கிறது.
பசுமை ஹைட்ரஜன் தொகுப்பு
தூத்துக்குடியில் உருவாகும் பசுமை ஹைட்ரஜன் தொகுப்பு உலகளவில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. உலக பொருளாதார மன்றம் இதனை "பசுமை ஹைட்ரஜன் தொகுப்பு" என அடையாளம் காட்டியிருக்கிறது. . இங்கு ஹைட்ரஜன் மற்றும் பசுமை அமோனியா போக்குவரத்துக்கான பைப்லைன் வழித்தடமும் உருவாக்கப்பட உள்ளது" இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications