திருச்செந்தூர் கோவில் பிரசாதம்.. சாமி பெயரில் விபூதி அடிக்கும் கும்பல் .. நிர்வாகம் போலீஸில் புகார்
தூத்துக்குடி: திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலின் பெயர் மற்றும் அடையாளத்தை கோயில் நிர்வாகத்தின் எந்தவிதமான அனுமதியும் இன்றி பயன்படுத்தி, Instagram, YouTube, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தவறான மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்பி, பக்தர்கள் மற்றும் பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் நபர்கள் மீது திருக்கோயில் நிர்வாகத்தால் அவ்வப்போது காவல் துறையில் புகார்கள் அளிக்கப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
04.01.2026 அன்று சமூக ஊடகப் பக்கத்தில், திருச்செந்தூர் கோயில் மூலவர் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பன்னீர் இலை விபூதி, சந்தனக்காப்பு பிரசாதம், குங்குமம், திருநீறு, கயிறுகள் உள்ளிட்ட பொருட்கள் பக்தர்களின் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும் எனப் பொய்யான தகவல்களை வெளியிட்டு, திருக்கோயில் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், மோசடியாக பணம் பறிக்கும் நோக்கில் காணொளிகள் வெளியாகி இருந்தது. இது பற்றி காவல்துறையில் கோவில் நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பெயர் மற்றும் அடையாளத்தை நிர்வாகத்தின் அனுமதியின்றி பயன்படுத்தி, இன்ஸ்டாகிராம், யூடியூப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக தவறான மற்றும் பொய்யான தகவல்களைப் பரப்பி பக்தர்கள் மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நபர்கள் மீது கோவில் நிர்வாகத்தால் அவ்வப்போது போலீசில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் சமூக ஊடகப் பக்கத்தில் கோவிலின் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணாக முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாக கூறப்படும் பன்னீர் விபூதி, சந்தன காப்பு பிரசாதம், குங்குமம், திருநீறு, கயிறுகள் உள்ளிட்ட பொருட்கள் பக்தர்களின் வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும் என பணம் பறிக்கும் நோக்கில் கும்பல் ஒன்று பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அந்த சமூக ஊடகப் பக்கத்தை உடனடியாக முடக்கவும், இந்த மோசடி செயல்களில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும் கோவில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலின் ஆன்லைன் சேவைகள், தரிசன முன்பதிவு, நன்கொடைகள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தகவல்களைப் பெற https//tiruchendurmurugan.hrcetngov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications