Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி மாவட்ட உப்பளத் தொழிலாளர்கள், பனைமரத் தொழிலாளர்களுக்கு அரசு வெளியிட்ட நல்ல செய்தி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் பனைமரத் தொழிலாளர்கள் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்வதற்கு தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் சார்பில் சிறப்பு பதிவு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கே.எஸ்.ஆனந்த் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கே.எஸ்.ஆனந்த் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியம் உட்பட 18 வகையான நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு வகையான அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்தால், அவர்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவி தொகைகள் வழங்கப்பட்டுவருகிறது.

tuticorin labour welfare board

இதற்கு தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர் பதிவினை புதுப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ளவர்களுக்கு திருமணம், மகப்பேறு, குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி, கண்கண்ணாடி மற்றும் நியமனதாரர்களுக்கு இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண உதவித்தொகை மற்றும் 60 வயது நிறைவு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் பனைமரத் தொழிலாளர்கள் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்வதற்கு தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் சார்பில் சிறப்பு பதிவு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

அதன்படி உப்பளத் தொழிலாளர்களுக்கு வரும் 10-ந்தேதி தூத்துக்குடி ராஜபாண்டியநகரிலும், 13-ந்தேதி ஸ்ரீவைகுண்டம் பெருமாள்புரத்திலும், 21-ந்தேதி ஆறுமுகநேரியிலும், மார்ச் 3-ந் தேதி தருவைகுளத்திலும் சிறப்பு பதிவு முகாம் நடைபெறும். பனைமரத் தொழிலாளர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) சவேரியார்புரத்திலும், 17-ந் தேதி வேம்பாரிலும், 28-ந் தேதி உடன்குடியிலும், மார்ச் 14-ந்தேதி வாழவல்லானிலும் சிறப்பு பதிவு முகாம் நடைபெறும்.

முகாமில் கலந்து கொள்ள வரும் போது ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறந்த தேதிக்கான ஆவணம் (பள்ளிசான்று, பிறப்பு சான்று, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம்), தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போட் சைஸ் புகைப்படம், நியமனதாரர் விவரம் (குடும்ப உறுப்பினர்) ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் கொண்டு செல்ல வேண்டும்.

மேலும் தூத்துக்குடி, கோரம்பள்ளம், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடம் 2-ம் தளத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தில் அலுவலக வேலை நாட்களில் மாவட்டத்தில் உள்ள பனைமரம் மற்றும் உப்பளத் தொழிலாளர் நேரில் வந்தும் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள 0461-2341110 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கே.எஸ்.ஆனந்த் பிரகாஷ் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+