"இந்து தீவிரவாதி" வலுக்கும் எதிர்ப்பு.. அரவக்குறிச்சியை போல் ஒட்டபிடாரத்திலும் கமல் பிரச்சாரம் ரத்து
ஒட்டப்பிடாரம்: இந்து தீவிரவாதி என்ற கருத்துக்கு எதிர்ப்பு வலுப்பதை அடுத்து அரவக்குறிச்சியை போல் ஒட்டப்பிடாரத்திலும் கமல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சியில் பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.
அவரது பெயர் நாதுராம் கோட்சே. இங்கு முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை என்றார் கமல். இந்த நிலையில் இந்துக்களை தீவிரவாதி என கமல் கூறியதாக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆணையத்தில் புகார்
கமலின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர். கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒட்டப்பிடாரத்தில்
இந்த நிலையில் அரவக்குறிச்சியில் நேற்று கமல்ஹாசன் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று ஒட்டப்பிடாரத்தில் அவர் பிரச்சாரம் செய்வதாக இருந்தது.

பிரச்சாரம் ரத்து
கமல் கருத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்துள்ளதால் அவரது ஒட்டப்பிடாரம் பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் திருப்பரங்குன்றத்தில் நாளை திட்டமிட்டபடி பிரசாரம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமலின் கருத்து
கமல் தெரிவித்த கருத்து தமிழ் சேனல்கள் மட்டுமல்லாமல் ஆங்கில ஊடகங்களிலும் விவாதத்துக்குள்ளாக்கப்பட்டது. இந்த நிலையில் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தக் கூடும் என்பதால் அவரது ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications