காலையிலேயே கமகமக்கும் மட்டன் பிரியாணி! சிக்கன் கிரேவி! அண்ணனுக்காக கனிமொழி வைத்த கறிவிருந்து!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் காலையிலேயே மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, அவித்த முட்டை, என கறிவிருந்து நடந்தி கவனம் ஈர்த்திருக்கிறார் கனிமொழி எம்.பி.
தனது அண்ணனும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 71ஆவது பிறந்தநாளை ஒட்டி இந்த பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் கனிமொழி. வழக்கமாக மதியம் தான் பிரியாணி விருந்து நடைபெறும். தூத்துக்குடியில் காலையிலேயே விருந்து தொடங்கி விட்டது. கட்சிக்காரர்கள் மட்டுமின்றி பெண்கள், பொதுமக்கள், என பல தரப்பட்டோரும் கனிமொழி வைத்த விருந்தில் கலந்துகொண்டனர். சாப்பிட உட்கார்ந்திருந்தவர்களுக்கு கனிமொழியே சிறிது நேரம் உணவு பரிமாறினார்.

ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை திருச்சி வந்த கனிமொழி, அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவோடு இரவாக தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இன்று காலை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்செந்தூரில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்த கனிமொழி, மாரத்தானில் கலந்துகொண்ட வீரர் -வீராங்கனைகளில் பலரும் காலணிகள் அணியாமல் வெறும் காலில் ஓடியதை பார்த்துவிட்டு அவர்களை அழைத்து விசாரித்திருக்கிறார். இதையடுத்து அவர்களுக்கு தனது சொந்த நிதியில் காலணிகள் வாங்கிக் கொடுப்பதற்கான ஏற்பாட்டை ஆன் தி ஸ்பாட்டிலேயே செய்ததோடு, உடனடியாக மேடைக்கு வரவழைத்து வழங்கினார்.
மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரம், நான்காம் பரிசாக ரூ. 25 ஆயிரம், மேலும் 5 முதல் 10 இடங்களில் வரும் 6 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டன. ஆண்களுக்கான போட்டி 21 கி.மீ தூரம் என்பதும் பெண்களுக்கான போட்டி 15 கி.மீ தூரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாரத்தான் நிகழ்ச்சியை தொடர்ந்து பிரியாணி விருந்து நடத்திய கனிமொழி, அதன் பின்னர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். அதேபோல் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர் மற்றும் உடன்குடி ஆகிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகளையும் இன்று காலை தொடங்கி வைத்தார்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications