இனி கடலைமிட்டாய்க்கு மட்டும் பேமஸ் அல்ல.. விமானங்களுக்கும்தான்! கோவில்பட்டியில் நடக்க போகும் புரட்சி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடலை மிட்டாய் மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்ற நிலையில் அதை விமானி பயிற்சி மையமாக மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை டிட்கோ செய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தை விமான பயிற்சி மையத்திற்கு பயன்படுத்தலாம் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது.

இதற்கான அறிவிப்பை தொழிற்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். தோணுகால் கிராமத்தில் மொட்டை மலை அடிவாரத்தில் 1.2 கி.மீ. நீளம், 15 மீட்டர் அகலத்தில் விமான ஓடுதளம் உள்ளது.
இந்த விமான ஓடுதளமானது கோவையை சேர்ந்த தொழில் நிறுவனமான லட்சுமி மில்ஸ் சார்பில் தனி விமானங்களை இறக்குவதற்காக உருவாக்கப்பட்டது. அவர்களுக்கு சிறிய ரக விமானமான செஸ்னா உள்ளது. நாலாட்டின்புதூர், தோணுகால் ஆகிய இரு இடங்களிலும் 63 ஹெக்டேர் நிலத்தில் இந்த ஓடுதளம் உள்ளது.
இது 1998-ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க 50 வகையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி மையம் அமைக்கும் திட்டமும் ஒன்று ஆகும்.
இந்தியாவிலேயே விமான பயிற்சிக்கு உகந்த இடமாக தமிழகம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகளை கொடுக்க போதுமான அகாதெமி இல்லை. இதை கருத்தில் கொண்டு கோவில்பட்டி லட்சுமி மில்ஸ் கொடுத்த இடத்தை விமான பயிற்சி மையம் அமைக்க ஏன் பயன்படுத்தக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் யோசனை தெரிவித்திருந்தார்.

அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். எனவே தோணுகால் ஓடுதளத்தை விமான பயிற்சி மையமாக மாற்ற மாவட்ட ஆட்சியரும் அறிக்கையை சமர்ப்பித்தார். வேறு இடத்தில் விமான பயிற்சி மையம் அமைத்தால் அங்கு நிலம் கையகப்படுத்துதல் போன்றவை இருக்கும். ஆனால் தோணுகாலில் அந்த பிரச்சினையே இருக்காது.
மேலும் தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களும் அருகே இருப்பதால் விமான பயிற்சிக்கு ஏற்ற இடமாக இது இருக்கும் என அறியப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக திட்ட இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தொழில்நுட்ப வல்லுநர்கள் கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி மலை அடிவாரத்தில் உள்ள விமான ஓடுதள பாதையை ஆய்வு செய்தனர்.
இந்த ஓடுதளம் கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ளதால் அதை சிறிது செப்பனிட்டால் பயன்படுத்த முடியும். இதனை சீரமைப்பதன் மூலம் 10-க்கும் மேற்பட்ட பயிற்சி விமானங்களை கையாள முடியும் என்பதை கண்டறிந்தனர். இந்த நிலையில் இந்த பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிகிறது.
இந்த பயிற்சி மையத்தை அமைத்தால் வேலைவாய்ப்பும் கிடைக்கும், விமானிகள் பற்றாக்குறையையும் போக்கும். விமான பயிற்சி மையம் அமைப்பதற்கு குறைந்த விமான போக்குவரத்து, மிதமான வானிலை, தெளிவான வானம், உள்கட்டமைப்பு உள்ளிட்டவை தேவை. இவை கோவில்பட்டியில் இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications