தாய்-மகள் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்... மிரட்டிய ஆண் நண்பர் கைது...என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: கோவில்பட்டியில் பரோட்டா- சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு, குளிர்பானம் குடித்த தாய் - மகள் - உயிரிழப்பு விவகாரத்தில் திடீர் திருப்பமாக அவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன். இவரது மனைவி கற்பகம் (34). மேலும் இந்த தம்பதிக்கு 7 வயதில் மகள் இருந்தார்,

இந்த்ச சூழலில் தாயு் கற்பகமும் அவரது மகளும் கடந்த 12ஆம் தேதி அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சிக்கன் கிரேவி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

 வாந்தி மயக்கம்

வாந்தி மயக்கம்

வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுடன் அவர்கள் அந்த சிக்கன் கிரேவியை சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், உணவைச் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் இருவருக்கும் வயிற்றில் எரிச்சல் ஏற்படவே, அவர்கள் அருகில் இருந்த கடைக்குச் சென்று குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர், குளிர்பானம் குடித்த சில நிமிடங்களிலேயே அவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

 தாய் மகள் உயிரிழப்பு

தாய் மகள் உயிரிழப்பு

குளிர்பானம் குடித்து மயங்கிய இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், அவர்களைக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், அங்குச் சிகிச்சை பலன் இல்லாமல் தாய், மகள் இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதலில் அவர்கள் கடையில் வாங்கிய சிக்கன் கிரேவி அல்லது குளிர்பானம் தான் உயிரிழப்பிற்குக் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

 திடுக் தகவல்கள்

திடுக் தகவல்கள்

இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட உணவகத்திலும், குளிர்பான கடையிலும் ஆய்வும் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக இருவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர், உயிரிழந்த இளங்கோவனின் மனைவி கற்பகத்தின் செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளது. பக்கத்து வீட்டில் வசிக்கும் வீரப்பெருமாள் (34) என்பவர் கற்பகத்தை தன்னுடன் வாழும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

 வாட்ஸ்அப் மூலம் மிரட்டல்

வாட்ஸ்அப் மூலம் மிரட்டல்

ஏற்கனவே கற்பகத்திற்கும், வீரப்பெருமாளுக்கும் தொடர்பு இருந்ததாகவும், அதன் பின்னர் கற்பகம் வீரப்பெருமாளுடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது எடுத்த படம் மற்றும் வீடியோவை வைத்து வீரப்பெருமாள் மிரட்டி வந்தது தெரியவந்துள்ளது. தாயும் மகளும் உயிரிழந்த அன்றும் கூட வீரப்பெருமாள் தொடர்ச்சியாகக் கற்பகத்திற்கு மிரட்டல் கொடுத்துள்ளார்.

 பக்கத்து வீட்டுக்காரர் கைது

பக்கத்து வீட்டுக்காரர் கைது

கற்பகத்தின் வாட்ஸ் அப் சாட்களை போலீசார் ஆய்வு செய்யும் போது இது குறித்து பல்வேறு உண்மைகள் தெரிய வந்துள்ளது. தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் படம் மற்றும் வீடியோவை காண்பித்து விட்டால் அவமானம் ஏற்பட்டுவிடும் என்ற கருதிய கற்பகம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக வீரப்பெருமாளை கைது செய்த போலீசார் அடுத்தகட்ட விசாரணையைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+