Kulasai Dasara: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நிறைவு.. இன்று நடைபெறும் சிறப்பு பூஜைகள்! குவிந்த பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10 ஆம் திருவிழாவான நேற்று முன் தினம் (அக்.02) நள்ளிரவு நடைபெற்ற நிலையில் 12 ஆம் நாளான இன்றுடன் விழா நிறைவு பெறுகிறது. இன்று பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம், அன்னதானம் உள்ளிட்டவைகள் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். நாட்டிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக குலசையில் தசரா விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், திருக்காப்பு கட்டி பல்வேறு வேடமணிந்து மக்களிடம் காணிக்கை பெற்று, கோவிலில் அதை நேர்த்திக்கடனாக செலுத்துவார்கள்.

Kulasai Dasara Mutharamman Temple

குலசை தசரா திருவிழா

இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு, பல்வேறு வேடங்களை அணிந்து, ஊரூராக சென்று காணிக்கை வசூலித்தனர். தசரா திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஊரிலும் தசரா பிறை அமைத்து அதில் தங்கியிருந்த அம்மனை வழிபட்ட பக்தர்கள், காளி வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்தனர்.

ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊரூராக சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி, காணிக்கைகளும் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த தசரா திருவிழாவில், தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சூர சம்ஹார நிகழ்ச்சி

10 ஆம் திருவிழாவான அக்டோபர் 2ஆம் தேதி நள்ளிரவு மகிஷாசூர சம்ஹாரம் நடைபெற்றது. சிங்க முகம், எருமை தலை, சேவலாக உருமாறி வந்த சூரனை அம்மன் வதம் செய்தார். குலசை கடற்கரையில் சூர சம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு "ஓம் காளி", "ஜெய் காளி" என கோஷமிட்டனர்.

விழாவின் 11-ம் நாளான நேற்று காலை 8.45 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளினார். இதையடுத்து, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். மாலை 4.45 மணிக்கு அம்மன் சப்பரம் கோவிலுக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து 5 மணியளவில் அம்மனுக்கு காப்பு களையப்பட்டது.

சிறப்பு பாலாபிஷேகம், அன்னதானம்

இதையடுத்து, விரதமிருந்து வேடம் அணிந்த பக்தர்களின் காப்புகளை கோயில் அர்ச்சகர்கள் களைந்தனர். தசரா திருவிழாவின் நிறைவு நாளான இன்று பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம், அன்னதானம் நடைபெறுகிறது. தசரா திருவிழாவை முன்னிட்டு குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது.

பக்தர்கள் வசதியை கருத்தில் கொண்டு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. உடன்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+