திருச்செந்தூர் தமிழ்! சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செந்தமிழில் கும்பாபிஷேகம்.. வெளியான முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.300 கோடியில் பணிகள் முடிவடைந்துவிட்டது. ஜூலை 7 ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலில் யாகசாலைகள் அமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ள நிலையில், கோயிலில் செந்தமிழில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருப்பது திருச்செந்தூர். இங்குள்ள முருகன் கோவில் உலக புகழ் பெற்றது. இந்த கோவிலில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. கோவிலில் யாகசாலை பூஜை வரும் ஜூலை 1ல் தொடங்க உள்ளது. குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவில் தமிழில் வேதங்கள் ஓத வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன. அரசியல் தலைவர்கள், பக்தர்கள் என பல்வேறு தரப்பிலும் இந்த கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஜூலை மாதம் 7-ம் தேதி காலை 6.15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் இதில் வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுர இன்னிசை ஆகியவை நடைபெறும் எனவும், பன்னிரு திருமுறைகள் திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேள்விச்சாலை வழிபாடு நாட்களில், வேதபாராயணம் திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுவர இன்னிசை நடைபெறும். காலை 7 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு, பக்கவாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறும்" என்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications