'கோவையில் அண்ணாமலை தோத்துட்டா மொட்டை அடித்து மீசையை மழித்து விடுறேன்'.. நடுரோட்டில் கூத்து
தூத்துக்குடி: "கோவையில் அண்ணாமலை தோத்துட்டா மொட்டை அடித்து மீசையை மழித்து விடுறேன்" என்று மாற்றுக் கட்சி நண்பர்களுடன் பந்தயம் கட்டிய தூத்துக்குடி பாஜக பிரமுகர் தேர்தல் முடிவு வந்த பிறகு நடுரோட்டில் மொட்டையடித்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமாரும், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணியும் என மொத்தம் 37 பேர் போட்டியிட்டார்கள். இதன் வாக்கு எண்ணும் பணி நேற்று முன்தினம் நடந்தது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலாவதாக தபால் ஓட்டு எண்ணப்பட்டது. அதனைத்தொடர்ந்து முதல் சுற்று வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பித்தது. இதில் தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வந்தார். அடுத்தடுத்து எண்ணப்பட்ட ஒவ்வொரு சுற்றிலும் கணபதி 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஓட்டுகள் வரை தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார்.
கடைசி சுற்றான 24-வது சுற்று முடிவில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,64,662 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,47,101 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,35,313 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 82,273 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அண்ணாமலையை விட 1 லட்சத்து 17 ஆயிரத்து 561 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
கொங்கு மண்டலத்தில் பாஜகவிற்கு கணிசமான ஆதரவு உள்ளது. குறிப்பாக கோவையில் நல்ல ஆதரவு உள்ளது. கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பாஜக தனித்து களம் ஆடிய போது, கன்னியாகுமரியில் வென்றது. அத்துடன் அதன் கூட்டணி கட்சியான பாமக தர்மபுரியில் வென்றது. கோவையில் சிபி ராதாகிருஷ்ணன் வெறும் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தார். ஜெயலலிதா, கருணாநிதி உயிருடன் இருந்த காலத்திலேயே அசாத்தியமான வெற்றி பெற்று அசத்தியது. அந்த தேர்தலில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.. சில தொகுதிகளில் 3வது இடத்தை பிடித்தது. இப்போது 2024ல் எப்படி அதிமுக தோல்வியை சந்தித்ததோ அதுபோல் அப்போது திமுக தோல்வியை சந்தித்து இருந்தது.
இந்த சூழலில் 2014 போல் மீண்டும் வெற்றி பெறலாம் என வியூகத்துடன் களம் இறங்கிய பாஜக, எங்குமே வெற்றி பெறவில்லை.. தர்மபுரியில் கிட்டவந்து அதன் கூட்டணி கட்சி தோற்றது. கன்னியாகுமரியில வாய்ப்பே இல்லாமல் போனது. முக்கியமாக கோவை தொகுதியில் 2014ஐ விட அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பாஜக தோல்வியை தழுவி உள்ளது. கோவையில் பாஜக இந்த முறை தனி வார்ரூம், தனி தேர்தல் அறிக்கை என வியூகம் வகுத்த போதும் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வியை தழுவி உள்ளார். இந்த தோல்வியால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள், பாஜகவினர் கலங்கி போய் உள்ளனர்..
அண்ணாமலை தோல்வி அடைய வாய்ப்பே இல்லை என்று உறுதியாக நம்பிய தூத்துக்குடி மாவட்டம் பனங்குறிச்சியைச் சேர்ந்த பாஜக பிரமுகர், கோவையில் அண்ணாமலை தோத்துட்டா மொட்டை அடித்து மீசையை மழித்து விடுறேன்" என்று மாற்றுக் கட்சி நண்பர்களுடன் பந்தயம் கட்டி உள்ளார். இந்நிலையில் நேற்று அண்ணாமலை தோல்வி அடைந்த தகவலை அடைந்து நடுரோட்டில் மொட்டை அடித்து மீசையை மழித்துக் கொண்டார்.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications